Breaking News

மணற்காடு புனித அந்தோனியார் ஆலய திருவிழாவை முன்னிட்டு.மாபெரும் மரதன் மற்றும் துவிச்சக்கர வண்டி போட்டிகள் விமரிசையாக நடைப்பெற்றன!



மணற்காடு புனித அந்தோனியார் ஆலய திருவிழாவை முன்னிட்டு.மாபெரும் மரதன் மற்றும் துவிச்சக்கர வண்டி போட்டிகள் விமரிசையாக நடைப்பெற்றன!






மணற்காடு புனித அந்தோனியார் ஆலயத்தின் வருடாந்த திருவிழாவை முன்னிட்டு, புனித யோசேவாஸ் இளையோர் ஒன்றியத்தின் ஏற்பாட்டில் மாபெரும் மரதன் ஓட்டப் போட்டியும், துவிச்சக்கர வண்டி ஓட்டப் போட்டியும் இன்று (07.06.2026) ஞாயிற்றுக்கிழமை மிக விமரிசையாக நடாத்தப்பட்டன.




உற்சாகத்துடன் தொடங்கிய போட்டிகள்

இன்று காலை 7.00 மணியளவில் அம்பன் பாடசாலைக்கு முன்பாக இரு போட்டிகளும் உத்தியோகபூர்வமாக ஆரம்பித்து வைக்கப்பட்டன. போட்டிகளில் கலந்துகொண்ட வீரர்கள் மற்றும் வீராங்கனைகள் இலக்கை நோக்கி மிக விறுவிறுப்பாகவும் உற்சாகத்துடனும் போட்டியிட்டனர். இப்போட்டிகளானது நிர்ணயிக்கப்பட்ட தூரத்தைக் கடந்து, மணக்காடு புனித அந்தோனியார் ஆலயத்தை வந்தடைந்தன.




இந்த நிகழ்வில் மணற்காடு பங்குத்தந்தை அருட்திருல் ஜோன் குரூஸ் அடிகளார் தலைமையில் இந்நிகழ்வுகள் அனைத்தும் சிறப்புற இடம்பெற்றன.



இப்போட்டிகளில் வீரர்களை உற்சாகப்படுத்துவதற்காக பெருந்திரளானோர் கலந்துகொண்டனர்



அருட்சகோதரிகள்

பகுதி மக்கள் மற்றும் அயலூர் பொதுமக்கள்

இளைஞர்கள், யுவதிகள்

ஆதரவுக்களம்: போட்டியின் பாதையெங்கும் கூடியிருந்த பொதுமக்கள் மற்றும் இளையோர், போட்டியில் பங்கேற்ற வீர, வீராங்கனைகளை கைதட்டி, ஆரவாரம் செய்து உற்சாகப்படுத்தியமை நிகழ்வுக்கு மேலும் உயிர் ஊட்டுவதாக அமைந்தது.




இத்திருவிழா போட்டிகள் அனைத்தும் எவ்வித தடங்கலுமின்றி மிக வெற்றிகரமாகவும், எழுச்சியோடும் நிறைவடைந்தன.