கதிர்காம பாத யாத்திரை குழுவிற்கு கொக்குத்தொடுவாய் பகுதியில்வைத்து உதவிகள்
கதிர்காம பாத யாத்திரை குழுவிற்கு கொக்குத்தொடுவாய் பகுதியில்வைத்து உதவிகள்...!
யாழ்ப்பாணம் வடமராட்சி தொண்டமனாறு சந்நிதியான் ஆச்சிரமத்தால் பாரம்பரியமிக்க சந்நிதியிலிருந்து கதிர்காமத்திற்கு பாத யாத்திரை செல்லும் யாத்திரிகர்களுக்கு கொக்குத்தொடுவாய் முருகன்
ஆலயத்தில் வைத்து,
சத்துமா பைக்கற்றுக்கள், பிஸ்கெட்டு பைக்கற்றுக்கள், தேநீர் பொருட்கள், தண்ணீர் என்பன இன்றைய தினம் 5ம் கட்டமாக சந்நிதியான் ஆச்சிராமத்தால் இன்று சனிக்கிழமை வழங்கி வைக்கப்பட்டன.
இவ் உதவிகளை ஆச்சிரம முதல்வர் சாதனைத் தமிழன் செ.மோகனதாஸ் சுவாமிகள் அவர்கள் தொண்டர்களுடன் நேரடியாகச் சென்று வழங்கி வைத்தார்.
இதேவேளை சந்நிதியான் ஆச்சிரமத்தின் சைவ கலை பண்பாட்டு பேரவையின் ஏற்பாட்டில் வாராந்த நிகழ்வாக நேற்று வெள்ளிக்கிழமை சந்நிதியான் ஆச்சிரமத்தில் ஆச்சிரம முதல்வர் சாதனை தமிழன் கலாநிதி மோகனதாஸ் சுவாமிகள் தலைமையில் பஞ்ச புராணம் ஒதுதலுடன் இடம்பெற்றது. இதில் “திருமுறை சிறப்புரை” என்னும் ஆன்மீக அருளுரையினை,
சைவத்திருமுறை நேர்முகப் பயிற்சி மைய்ய இயக்குனர் சிவத்திரு சபா சண்முகசுந்தரம் அவர்கள் நிகழ்த்தினார்கள்.
இந்நிகழ்வில் சன்னிதியான் ஆச்சிரம சைவ கலை பண்பாட்டு பேரவையின் நிர்வாகிகள் உறுப்பினர்கள் சன்னதியான் ஆத்திரமத்தின் தொண்டர்கள் அடியவர்கள் என பலரும் கலந்து கொண்டிருந்தனர்.
