கரவெட்டி பிரதேச சபையில் ஜனநாயகம் மீறப்படுகிறது: சபை உறுப்பினர் பகிரங்க குற்றச்சாட்டு
கரவெட்டி பிரதேச சபையில் ஜனநாயகம் மீறப்படுகிறது: சபை உறுப்பினர் பகிரங்க குற்றச்சாட்டு
கரவெட்டி பிரதேச சபையின் அண்மைக்கால நடவடிக்கைகள் மற்றும் சபை அமர்வுகளில் இடம்பெறும் சம்பவங்கள் தொடர்பில் மக்கள் உண்மைகளைத் தெரிந்துகொள்ள வேண்டும் எனச் சுட்டிக்காட்டி, சபையின் உறுப்பினர் ஒருவர் ஊடகவியலாளர் சந்திப்பொன்றை நடத்தியுள்ளார்
நிதி ஒதுக்கீடு மற்றும் அபிவிருத்தி முடக்கம்
கடந்த ஏப்ரல் 27ஆம் திகதி நடைபெற்ற மாதாந்த சபை அமர்வின் போது, 2026ஆம் ஆண்டுக்கான நிதியிலிருந்து 2 மில்லியன் ரூபாவை ஒதுக்கீடு செய்வதற்கான பிரேரணையைத் தவிசாளர் முன்மொழிந்திருந்தார். இதற்கு உறுப்பினர்கள் சம்மதம் தெரிவித்திருந்த போதிலும், சபையின் வருமானம் மற்றும் அபிவிருத்தி பணிகள் குறித்துக் கேள்வி எழுப்பப்பட்டதாக அவ்வுறுப்பினர் தெரிவித்தார்.
"இந்த ஆண்டின் முதல் காலாண்டில் மட்டும் கரவெட்டி பிரதேச சபைக்கு 31 கோடியே 89 இலட்சத்து 80 ஆயிரத்து 973 ரூபா 03 சதம் வருமானமாகக் கிடைத்துள்ளது. இரண்டாம் காலாண்டு தொடங்கி பாதியைக் கடந்த நிலையிலும், கரவெட்டி மக்களுக்குச் சேர வேண்டிய எந்தவொரு உருப்படியான அபிவிருத்திப் பணிகளும் தவிசாளரால் முன்னெடுக்கப்படவில்லை," என அவர் குற்றம் சாட்டினார்.
