Breaking News

சிவில் அமைப்பு பிரதிநிதிகளை அழைப்பதற்கு தயங்குவதன் பின்னணி என்ன?



சிவில் அமைப்பு பிரதிநிதிகளை அழைப்பதற்கு தயங்குவதன் பின்னணி என்ன? 




தமிழ் மக்களின் தீர்வு விடயங்களை திம்புக் கோட்பாட்டின் அடிப்படையில் சமஸ்டித் தீர்வினை முன்னோக்கி கொண்டு செல்ல வேண்டும் என நாங்கள் வலியுறுத்திய நிலையில் அதற்கு இணங்கிய நிலையில் இரண்டு கூட்டங்களிலும் கலந்து கொண்டோம்.


ஆனால் கூட்டங்களில் எடுக்கப்படுகின்ற தீர்மானங்களை மீறி சிலரால் எதேச்சை அதிகாரமான ஒருதலைப் பட்சமான தீர்மானங்களை எங்களால் ஏற்றுக் கொள்ள முடியாது.


தமிழ் மக்களின் தீர்வு விடயங்களில் சிவில் சமூகப் பிரதிநிதிகள் வகிபாகம் என்பது காத்திரமான பங்கை வகிக்கின்ற நிலையில் அவர்களையும் இணைத்து தீர்வு விடையங்களை முன்னோக்கிக் கொண்டு செல்வதே சிறந்த விடயம்.


ஆகவே தமிழ் சட்டத்தரணிகள் பேரவை சுயாதீனமாக செயல்படாமை காரணமாக தொடர்ந்தும் அந்த க் கூட்டங்களில் பங்களிப்பு செய்வது அர்த்தமற்ற விடயம் என கருதிய நிலையில் கூட்டத்துக்கு செல்ல வில்லையன அவர் மேலும் தெரிவித்தார்