Breaking News

தேனிசை செல்லப்பா அவர்களுக்கு ஜனநாயக போராளிகள் கட்சி அஞ்சலி

 தேனிசை செல்லப்பா அவர்களுக்கு ஜனநாயக போராளிகள் கட்சி அஞ்சலி 



மறைந்த தமிழ்நாட்டு பாடகர் தேனிசை செல்லப்பா அவர்களுக்கு ஜனநாயக போராளிகள் கட்சி இன்று மணல்காடு கிராமத்தில் நினைவேந்தல் நிகழ்வினை மேற்கொண்டுள்ளது 


ஜனநாயக போரளிகள் கட்சியின் பருத்தித்துறை பிரதேச சபை உறுப்பினர் அகஸ்டின் ஆசிரியர் தலைமையில் இடம்பெற்ற நிகழ்வில் முதல் நிகழ்வாக ஈகைச் சுடர் ஏற்றப்பட்டு மலர் மாலை அணிவிக்கப்பட்டு மலர் அஞ்சலி செலுத்தப்பட்டது.


ஈகை சுடரினை ஜனநாயக போராளிகள் கட்சி தலைவர் ஏற்றிவைத்து மலர் மாலை அணிவித்ததை தொடர்ந்து நிகழ்வில் கலந்து கொண்டவர்கள் மலர் அஞ்சலி செலுத்தினர்.


தொடர்ந்து தேனிசை செல்லப்பா அவர்கள் நினைவாக மரக் கன்று ஒன்றும் நாட்டிவைக்கப் பட்டது.


இந் நிகழ்வில் ஜனநாயக போரளிகள் கட்சி உறுப்பினர்கள், கிராம மக்கள் பிரதேச சபை உறுப்பினர்கள் என பலரும் கலந்துகொண்டு அஞ்சலி செலுத்தி

னர்