பாராளுமன்ற உறுப்பினர் ஏ.ஆதம்பாவா அவர்களினால் பாதிக்கப்பட்ட மக்களுக்கான இழப்பீடு வழங்கி வைப்பு!! --------------------------------
பாராளுமன்ற உறுப்பினர் ஏ.ஆதம்பாவா அவர்களினால் பாதிக்கப்பட்ட மக்களுக்கான இழப்பீடு வழங்கி வைப்பு!!
-------------------------------------------------
எஸ் ஜே புஹாது
அண்மையில் ஏற்பட்ட டித்வா(Ditwa) புயலினால் பாதிக்கப்பட்ட கால்நடை உற்பத்தி பண்ணையாளர்களுக்கான அரசாங்கத்தின் இழப்பீடு வழங்கும் நடவடிக்கை கால்நடை உற்பத்தி சுகாதார திணைக்களத்தின் அணுசரணையில் நேற்று (02) நடைபெற்றது.
இந்நிகழ்வில் பாராளுமன்ற உறுப்பினரும், அம்பாறை மாவட்ட கரையோர பரதேச ஒருங்கிணைப்புக் குழுவின் தலைவருமான,
இலங்கை அரசியல் பேரவை உறுப்பினர் அபூபக்கர் ஆதம்பாவா பிரதம அதிதியாக கலந்து கொண்டு அட்டாளைச்சேனை, சாய்ந்தமருது, அக்கரைப்பற்று, ஆலையடிவேம்பு, திருக்கோவில் நாவிதன்வெளி போன்ற பிரதேச பயனாளிகளுக்கு இழப்பீட்டுக்கான காசோலைகளை வழங்கி வைத்தார்.
இந்நிகழ்வில் கால்நடை உற்பத்தி சுகாதார வைத்திய அதிகாரிகள் , தேசிய மக்கள் சக்தியின் பிரதேச அமைப்பாளர்கள், பாராளுமன்ற உறுப்பினரின் இணைப்புச்செயலாளர்,
பயனாளிகள் உட்பட பலரும் கலந்து சிறப்பித்தனர்..
தன் போது இழப்பீட்டினை பெற்றுக்கொண்ட பயனாளிகள்
அரசாங்கத்திற்கும், ஜனாதிபதிக்கும் நன்றி தெரிவித்தனர்.
