Breaking News

பருத்தித்துறையில் சோகம்: காணாமல் போன 6 வயது சிறுவன் கிணற்றில் சடலமாக மீட்பு!

 பருத்தித்துறையில் சோகம்: காணாமல் போன 6 வயது சிறுவன் கிணற்றில் சடலமாக மீட்பு!



யாழ்ப்பாணம் பருத்தித்துறை, வல்லிபுர குறிச்சி பகுதியில் கிணற்றில் விழுந்து 6 வயது சிறுவன் ஒருவன் பரிதாபகரமாக உயிரிழந்துள்ளதாக காவல்துறையினர் தெரிவித்துள்ளனர்.


குறித்த பகுதியைச் சேர்ந்த சிறுவன் ஒருவன் நேற்று வெள்ளிக்கிழமை (12) இரவு முதல் காணாமல் போயுள்ளதாகக் கிடைத்த தகவலின் அடிப்படையில், பருத்தித்துறை காவல்துறையினர் தீவிர விசாரணைகளையும் தேடுதல் நடவடிக்கையையும் ஆரம்பித்திருந்தனர்.


இந்த நிலையில், முன்னெடுக்கப்பட்ட தேடுதலின் போது சிறுவனின் வீட்டிற்கு அருகாமையில் உள்ள கிணறு ஒன்றிற்குள் இருந்து அந்தச் சிறுவன் சடலமாக மீட்கப்பட்டுள்ளான்.


உயிரிழந்த சிறுவன் வல்லி புர குறிச்சி பகுதியைச் சேர்ந்தவர் என அடையாளம் காணப்பட்டுள்ளார். இச்சோகமான விபத்துச் சம்பவம் குறித்து பருத்தித்துறை காவல்துறையினர் மேலதிக விசாரணைகளை முன்னெடுத்து வருகின்றனர்


 இதேவேளை குறித்த சிறுவனது தாய் தந்தை வாய் பேச முடியாதவர்கள் என்று பிரதேச மக்கள் தெரிவிக்கின்றனர்