Breaking News

அமெரிக்க - ஈரான் பேச்சுவார்த்தை: கத்தார் மத்தியஸ்தக் குழு மீண்டும் ஈரானுக்குப் பயணம்!

 அமெரிக்க - ஈரான் பேச்சுவார்த்தை: கத்தார் மத்தியஸ்தக் குழு மீண்டும் ஈரானுக்குப் பயணம்!



===============================


டெஹ்ரான்: அமெரிக்காவிற்கும் ஈரானுக்கும் இடையிலான இராஜதந்திரப் பேச்சுவார்த்தைகளை அடுத்த கட்டத்திற்கு நகர்த்தும் நோக்கில், கத்தார் மத்தியஸ்தக் குழு மீண்டும் ஈரானின் டெஹ்ரான் நகரைச் சென்றடைந்துள்ளது.


ஈரானின் 'இஸ்னா' (ISNA) செய்திச் சேவை வெளியிட்டுள்ள அறிக்கையின்படி, கத்தார் பிரதமரும் வெளியுறவு அமைச்சருமான ஷேக் முகமது பின் அப்துல்ரஹ்மான் பின் ஜாசிம் அல் தானியின் பிரத்தியேக ஆலோசகர் தலைமையிலான உயர்மட்டக் குழுவே டெஹ்ரானை வந்தடைந்துள்ளது. கடந்த வாரம் இரு நாடுகளுக்கும் இடையே இடம்பெற்ற முக்கிய பேச்சுவார்த்தைகளைத் தொடர்ந்து இம்முறை கத்தாரில் இருந்து இக்குழு பயணித்துள்ளது.