Breaking News

தீவக வலயக் கல்வி அலுவலகத்தில் நான்கு மாதங்களாக இயங்கு நிலை அற்ற ஹயஸ் வாகனம்..

 தீவக வலயக் கல்வி அலுவலகத்தில் நான்கு மாதங்களாக இயங்கு நிலை அற்ற ஹயஸ் வாகனம்..



தீவக பாடசாலைகளை கண்காணிப்பதற்காக அதிகாரிகள் செல்லும் ஹயாஸ் வாகனம் நான்கு மாதங்களாக செயற்பாடு இன்றி காணப்படுவதாக குற்றச்சாட்டு எழுந்துள்ளது. 


சம்பவம் தொடர்பில் தெரிய வருவதாவது தீபக பாடசாலைகளுக்காக வலையக்கல்வி அலுவலகத்தில் இருந்து அதிகாரிகள் சென்றுவருவதற்கு குறித்த வாகனம் பயன்பாட்டில் இருந்துள்ளது.


ஆனால் வாகனத்தின் டயர்கள் சீரின் மை காரணமாக நான்கு மாத காலமாக குறித்த வாகனம் வலையக் கல்வி அலுவலகத்திலே தரித்து நிற்பதாகவும் தீவக பாடசாலைகளை வினைதிறனாக செயல்படுத்துவதற்கு குறித்த வாகனம் பயன்பாட்டில் இல்லை எனவும் குற்றச்சாட்டு முன்வைக்கப்படுகிறது.


குறித்த விடயம் தொடர்பில் தீவக வலையக் கல்விப் பணிப்பாளரை தொடர்பு கொள்ள முயற்சித்த போதும் தொடர்பு கொள்ள முடியவில்லை.


இன் நிலையில் மாகாண கல்வி பணிப்பாளரை தொடர்பு கொண்டு கேட்டபோது குறித்த வாகனம் பழுது தொடர்பில் தமக்கு அறிக்கை இடப்படவில்லை என தெரிவித்ததோடு அது தொடர்பில் தான் ஆராய்வதாகவும் தெரிவித்தார்