Breaking News

கிளிநொச்சியில் வீதி விபத்து: பாதசாரி சம்பவ இடத்திலேயே உயிரிழப்பு; சாரதி கைது


கிளிநொச்சியில் வீதி விபத்து: பாதசாரி சம்பவ இடத்திலேயே உயிரிழப்பு; சாரதி கைது




கிளிநொச்சி: ஏ-9 பிரதான வீதியில் இடம்பெற்ற கோர விபத்தில் குடும்பத்தர் ஒருவர் சம்பவ இடத்திலேயே உயிரிழந்துள்ளார்.



நேற்று (21) மாலை யாழ்ப்பாணத்திலிருந்து கிளிநொச்சி நோக்கி பயணித்த KW 8757 இலக்கமுடைய கார், 259 ஆம் கட்டை சந்திக்கு அருகாமையில் வீதியால் நடந்து சென்றுகொண்டிருந்த நபர் மீது மோதியதில் இந்த விபத்து நேர்ந்துள்ளது.



மற்றும் 

விபத்தில் படுகாயமடைந்த தர்மராசா அவர்கள் சம்பவ இடத்திலேயே உயிரிழந்துள்ளார். விபத்தை ஏற்படுத்திய காரின் சாரதி தற்போது கிளிநொச்சி பொலிஸாரால் கைது செய்யப்பட்டுள்ளார்.



இச்சம்பவம் குறித்த மேலதிக விசாரணைகளை கிளிநொச்சி பொலிஸ் பிரிவின் போக்குவரத்துப் பிரிவு அதிகாரிகள் மேற்கொண்டு வருகின்றனர். மேலதிக சட்ட நடவடிக்கைகளுக்காக சாரதி நீதிமன்றில் ஆஜர்படுத்தப்படவுள்ளார்