வட மாகாண ஆளுநருக்கும் பலாலி விமானப்படைத் தளபதிக்கும் இடையில் சந்திப்பு
வட மாகாண ஆளுநருக்கும் பலாலி விமானப்படைத் தளபதிக்கும் இடையில் சந்திப்பு
யாழ்ப்பாணம் | 22 ஏப்ரல் 2026
வட மாகாண கௌரவ ஆளுநர் நா. வேதநாயகன் அவர்களுக்கும், பலாலி விமானப்படைத் தளபதி குரூப் கப்டன் டி.எஸ்.எஸ். சுரங்க செனவிரத்ன அவர்களுக்கும் இடையிலான உத்தியோகபூர்வ சந்திப்பொன்று இன்று காலை நடைபெற்றது.
யாழ்ப்பாணத்திலுள்ள ஆளுநர் செயலகத்தில் இடம்பெற்ற இந்தச் சந்திப்பு, ஒரு சம்பிரதாயபூர்வமான மற்றும் சுமுகமான கலந்துரையாடலாக அமைந்திருந்தது. இதன் போது வட மாகாணத்தின் தற்போதைய சமகால நிலைமைகள் மற்றும் பாதுகாப்புச் சூழல் குறித்து இருவரும் விரிவாகக் கலந்துரையாடினர்.
இந்தச் சந்திப்பில் வட மாகாண ஆளுநரின் செயலாளர் சிவபாதசுந்தரம் சத்தியசீலன் அவர்களும் உடனிருந்தார். சந்திப்பின் நிறைவில் நினைவுப் பரிசில்களும் பரிமாறிக் கொள்ளப்பட்டமை குறிப்பிடத்தக்கது
