பொத்துவில் விவசாயிகளுக்கு விவசாய உள்ளீடுகள் வழங்கி வைப்பு
பொத்துவில் விவசாயிகளுக்கு விவசாய உள்ளீடுகள் வழங்கி வைப்பு
கிழக்கு மாகாண விவசாய திணைக்களத்தினால் பொத்துவில் பிரதேச விவசாயிகளுக்கு நவீன தொழில்நுட்ப விவசாய உள்ளீடுகள் வழங்கிவைக்கப்பட்டது.
இந்நிகழ்வு நேற்று (03/03/2026) பெத்துவில் பொது நூலக மண்டபத்தில் நடைபெற்றது.
பாராளுமன்ற உறுப்பினரும் கரையோரப்பிரதேச ஒருங்கிணைப்புக்
குழுத்தலைவருமான அபூபக்கர் ஆதம்பாவா இந்த நிகழ்வில் கலந்து கொண்டு பயனாளிகளுக்கு வழங்கி வைத்தார்.
இந்நிகழ்வில் கிழக்கு மாகாண விவசாய அமைச்சின் செயலாளர் ஏ எல் எம் அஸ்மி உட்பட கிழக்கு மாகாண விவசாய அமைச்சின் பணிப்பாளர் றினோஸ் ஆகியோர் கலந்து கொண்டனர்.
