Breaking News

முஸ்லிம் காங்கிரஸ் எம்பிக்கள் அனுதாப புத்தகத்தில் கையொப்பமிட்டனர்

 முஸ்லிம் காங்கிரஸ் எம்பிக்கள் அனுதாப புத்தகத்தில் கையொப்பமிட்டனர்



அமெரிக்கா மற்றும் இஸ்ரேல் படையினரால் அண்மையில் படுகொலை செய்யப்பட்ட ஈரானின் ஆன்மீகத் தலைவர் அயதுல்லா அலி கமேனிக்கு அனுதாபம் தெரிவிக்கும் வகையில் அனுதாப புத்தகமொன்றை கொழும்பிலுள்ள ஈரான் தூதுவராலயம் இன்று (04) புதன்கிழமை திறந்துள்ளது. 


ஶ்ரீலங்கா முஸ்லிம் காங்கிரஸ் தலைவர் தலைமையில் கட்சியின் எம்பிக்கள் அனுதாப புத்தகத்தில் இன்று (4) கையொப்பமிட்டனர்.


எதிர்வரும் 6ஆம் திகதி வெள்ளிக்கிழமை வரை இல. 222, பௌத்தாலோக மாவத்தை, கொழும்பு - 07 இலுள்ள இலங்கைக்கான தூதுவரின் உத்தியோகபூர்வ வாசஸ்தலத்தில் இந்த அனுதாப புத்தகம் வைக்கப்படவுள்ளது.