Breaking News

அட்டாளைச்சேனை பலநோக்கு கூட்டுறவுச் சங்க பொதுச் சபைக் கூட்டம் ஒத்திவைப்பு.

 அட்டாளைச்சேனை பலநோக்கு கூட்டுறவுச் சங்க பொதுச் சபைக் கூட்டம் ஒத்திவைப்பு. 





அட்டாளைச்சேனை பலநோக்கு கூட்டுறவுச் சங்கத்தின் பொதுச் சபைக்கூட்டம் 2026.03.29ஆந் திகதி நடைபெறவதற்கான ஏற்பாடுகள் நடைபெற்றிருந்ததுடன், பொதுச் சபைக் கூட்டத்தில் கலந்தாலோசிப்பதற்கான விடயங்கள் தொடர்பில் எழுத்துமூலம் சமர்ப்பிக்குமாறும் அங்கத்தவர்களிடம் கோரப்பட்டிருந்தது. 


இருந்த போதிலும் நாட்டில் ஏற்பட்டுள்ள அசாதாரண சூழ்நிலை, எரிபொருள் நெருக்கடி என்பனவற்றினை கருத்திற் கொண்டு குறித்த கூட்டத்தினை காலவரையறையின்றி ஒத்திவைப்பதாக சங்கத்தின் தலைவர் ஏ.பி.எம்.சரீப் அங்கத்தவர்களுக்கு கடிதம் மூலமாக அறிவித்துள்ளார்.  


சங்கத்தின் தலைவர் தலைமையில் 2027.03.24ஆந் திகதி இடம்பெற்ற விசேட பணிப்பாளர் கூட்டத்திலே மேற்படி தீர்மானம் நிறைவேற்றப்பட்டுள்ளது. 


சங்கத்தின் எதிர்கால அபிவிருத்தி, எரிபொருள் நிலையம், நெல் கொள்வனவு மற்றும் நீச்சல் தடாக நிர்மாணம் அத்துடன் கோப் சிற்றி நவீனமயப்படுத்தல் என பல்வேறு நிகழ்ச்சி நிரல்களை உள்ளடக்கி நடைபெறவிருந்த மேற்படி கூட்டம் நாட்டின் நிலமையினை கருத்திற்கொண்டும், அரசாங்கத்தின் அறிவுறுத்தல்களுக்கு அமைவாகவும் இதனை ஒத்திவைப்பதாக தலைவர் சரீப் தெரிவித்தார். 


நாட்டின் நிலமை வழமைக்கு திரும்பியதும் குறித்த பொதுச் சபைக் கூட்டமானது மிக விரைவில் இடம்பெறவுள்ளதாகவும் தலைவர் தெரிவித்தமை குறிப்பிடத்தக்கது.