Breaking News

தொழிலாளர் கூட்டுறவு சங்கங்களின் சமாசத்தினரால் 7,50,000 ரூபா நிதி உதவி

 தொழிலாளர் கூட்டுறவு சங்கங்களின் சமாசத்தினரால் 7,50,000 ரூபா நிதி உதவி




யாழ்ப்பாணம் வடமராட்சி வடக்கு கடற் தொழிலாளர் கூட்டுறவு சங்கங்களின் சமாசத்தினரால் 7,50,000 ரூபா நிதி உதவி வழங்கி வைக்கப்பட்டுள்ளது. 


 28 5 2026 அன்று கடற்தொழிலுக்கு சென்று காணாமல் போன மீனவர்களது குடும்பங்களுக்கும், காணாமல் போனோ 4 மீனவர்களை தேடுவதற்காகவும் முனை கடற்றொழிலாளர் கூட்டுறவு சங்கம், மற்றும் கற்கோவளம், கடற் தொழிலாளர் கூட்டுறவு சங்கம் ஆகியவற்றின் உறுப்பினர்கள் தமது படகுகளுக்கு அதிக செலவிலான எரிபொருளை செலவு செய்து பல நாட்களாக தேடிக் கொண்டிருந்தனர். எனினும் காணாமல் போனவர் தொடர்பான எந்தவித தகவல்களும் இல்லை. இந்த தேடுதலின் போது ஏற்பட்ட எரிபொரூட் செலவில் சிறிதளவேனும் ஈடு செய்வதற்காகவே வடமராட்சி வடக்கு கடற் தொழிலாளர் கூட்டுறவு சங்கங்களின் சமசந்தினரால் முனை கடற் தொழிலாளர் கூட்டுறவு சங்கம், கற்கோளம் கடற்றொழி லாளர் கூட்டுறவு சங்கம் ஆகிய இரண்டு சங்கங்களுக்கும் காணாமல் போன நான்கு மீனவர்களது குடும்பங்களுக்கும் குறித்த நிதி உதவிகள் வழங்கி வைக்கப்பட்டன 


நிதி உதவிகளை வடமராட்சி வடக்கு கடற் றொழிலாளர் கூட்டுறவு சங்கங்களின் சமாசத்தின் தலைவர் பிரதிபன் செயலாளர் கைற்றஸ் பொருளாளர் மயூரன் மற்றும் நிர்வாக உறுப்பினர்கள் பலரும் இணைந்து நேரடியாக சங்கங்களுக்கு காணாமல் போன மீனவர்களது வீடுகளுக்கும் சென்று வழங்கி வைக்கப்பட்டன