அமரர் தவமணிதேவி ஞாபகார்த்த நிழற்குடை நகரக்கோவிலில் திறந்துவைப்பு...!
அமரர் தவமணிதேவி ஞாபகார்த்த நிழற்குடை நகரக்கோவிலில் திறந்துவைப்பு...!
அமரர் தவமணிதேவி சதாசிவம் அவர்கள் ஞாபகார்த்த நிழற்குடை நாகர்கோவில் நாகதம்பிரான் ஆலயம் அருகமையில் இன்று மதியம் 12:30 மணியளவில் முன்னாள் பாராளுமன்ற உறுப்பினரும், இலங்கை தமிழரசு கட்சியின் பொது செயலாளருமான m.A.சுமந்திரன் அவர்களால் திறந்து வைக்கப்பட்டுள்ளது.
அமரர் தவமணிதேவி சதாசிவம் அவர்களது மருமகனான பருத்தித்துறை நகரசபை உறுப்பினர் சட்டத்தரணி திரு. திருஞானசம்மந்தன் தலைமையில் இடம் பெற்ற நிகழ்வில் முன்னாள் பாராளுமன்ற உறுப்பினரும், இலங்கை தமிழரசு கட்சியின் பொதுச் செயலாளருமான m.A.சுமந்திரன் பிரதம விருந்தினராக கலந்துகொண்டு அமரர் தவமணிதேவி சதாசிவம் அவர்கள் நினைவு நிழற்குடையினை திறந்துவைத்தார்.
இதில் முன்னாள் மாகாண சபை உறுப்பினர் சந்திரலிங்கம் சுகிர்தன், பருத்தித்துறை பிரதேச சபை உப தவிசாளர் காந்தரூபன், பருத்தித்துறை நகரசபை உப தவிசாளர் தேவராஜேந்திரன், உறுப்பினர்களான திரு.ரஞ்சுன், நிமலேந்திரன், அனல்ரெஜி, முன்னாள் பருத்தித்துறை பிரதேச சபை தவிசாளர் பூபால சிங்கம் சஞ்சீவன் மற்றும் அமரர் தவமணிதேவி சதாசிவம் அவர்களது உறவினர்கள் என பலரும் கலந்துகொண்டனர்.
