மன்னார் மருதமடு திருத்தலத்தின் ஆடி மாதத் திருவிழாவிற்கான 2ஆவது ஆயத்த கூட்டம் - 25.06.2026
மன்னார் மருதமடு திருத்தலத்தின் ஆடி மாதத் திருவிழாவிற்கான 2ஆவது ஆயத்த கூட்டம் - 25.06.2026
இன்று வெள்ளிக்கிழமை 25.06.2026 காலை 11.00 மணிக்கு மன்னார் மறைமாவட்டத்தின் மருதமடு திருத்தல ஆடித் திருவிழாவிற்கான இரண்டாவது ஆயத்த கூட்டம் மன்னார் மாவட்ட செயலாளர் திரு. க. கனகேஸ்வரன் அவர்களின் தலைமையில் மருதமடு திருத்தலத்தில் அமைந்துள்ள புனித ஜோசெவ்வாஸ் மண்டபத்தில் நடைபெற்றது.
வருடா வருடம் மடு அன்னையின் ஆடி திருவிழாவில் கலந்து கொள்ள நாட்டின் பல பாகங்களில் இருந்தும் புலம்பெயர் நாடுகளில் இருந்தும் லட்சக்கணக்கான பக்தர்கள் வந்து செல்வது வழமை.
வருகை தரும் பக்தர்களின் நலனை கருத்தில் கொண்டு முன்னெடுக்கப்பட வேண்டிய சகல விதமான ஏற்பாடுகள் குறித்து அழைக்கப்பட்ட திணைக்களங்களுடன் கலந்துரையாடப்பட்டது. சிறப்பாக சுகாதாரம், போக்குவரத்து, மருத்துவ வசதிகள், நீர் விநியோகம், உணவு விநியோகம் உள்ளிட்டவை குறித்து ஆராயப்பட்டது.
மன்னார் மாவட்ட அரசாங்க அதிபர் தலைமையில் இடம்பெற்ற குறித்த முன்னாயத்த இரண்டாவது கலந்துரையாடலில் மன்னார் மறைமாவட்ட குருமுதல்வர் அருட்பணி. கிறிஸ்து நேசரட்னம் அடிகளார், மடு திருத்தல பரிபாலகர் அருட்பணி. பெப்பி சோசை அடிகளார், காவல்துறையினர், கடற்படை அதிகாரிகள், பிரதேச செயலாளர்கள், வைத்தியர்கள் மற்றும் அழைக்கப்பட்ட திணைக்கள தலைவர்களும் என பலர் கலந்து கொண்டனர்.
மன்னார் மடு திருத்தலத்தின் இவ் ஆடி மாத திருவிழாவிற்கான முதலாவது ஆயத்த கூட்டம் கடந்த 11.06.2026 அன்று மாவட்ட செயலகத்தில் அரசாங்க அதிபர் தலைமையில் நடைபெற்றமை குறிப்பிடத்தக்கது.
#Madhuchurch #Dioceseofmannar #mettingtime #julyfeast #srilanka
