வடமராட்சி தெற்கு மேற்கு பிரதேச சபையில் கடும் வாத பிரதிவாதம்...!
வடமராட்சி தெற்கு மேற்கு பிரதேச சபையில் கடும் வாத பிரதிவாதம்...!
வடமராட்சி தெற்கு மேற்கு பிரதேச சபையின் மாதாந்த அமர்வு சபையின் உப தவிசாளர் தி.தயாபரன் தலைமையில் இடம்பெற்றபொது
இன்று கடுமையான வாத பிரதி வாதங்கள் இடம் பெற்றுள்ளன.
ஊடகவியலாளர்களுக்கு கடுமையான கட்டுப்பாடு விதிக்கப்பட்டமை தொடர்பில் தேசிய மக்கள் சக்தி உறுப்பினர்கள் கேள்வியெழுப்பிய போதே கடும் தர்க்கம், வாத பிரதிவாதம் இடம் பெற்றுள்ளது.
அடையாள அட்டை பதிவுகளின்றி உள்ளே அனுமதிக்கமுடியாது,
நபர்களுக்கிடையே கலந்துரையாடல் முற்றுமுழுதாக தடைசெய்யப்பட்டு அமைதியாக செயற்படுதல், எந்தவொரு உறுப்பினருடனும் சபை அமர்வு நேரத்தில் தொடர்புகொள்ளலாகாது, தொலைபேசி உரையாடல்கள் சபை அமர்வு நடைபெறும் கட்டடப்பகுதிக்குள் மேற்கொள்ளலாகாது, தொலைபேசியை அமைதிநிலையில் வைத்திருத்தல் அல்லது நிறுத்திவைத்திருத்தல்,
நிகழ்வுகளை ஒலிப்பதிவு, ஒளிப்பதிவு செய்வதாயின் முன் அங்கீகாரம் பெற்றிருத்தல் வேண்டும்,
ஒதுக்கப்பட்ட இடத்தை தவிர வேறுபகுதிக்குள் நடமாட இயலாது, ஒலி, ஒளிப்பதிவு செய்வதற்கு அனுமதியளித்திருந்தாலும் தவிசாளர் அவர்களினால் பதிவுகளை நிறுத்துமாறு கட்டளையிட்டால் எதுவித மறுப்புமின்றி உடனடியாக செயற்படுத்தவேண்டும், உறுப்பினர்களிடையே வாதப்பிரதிவாதங்கள் கடுமையான தொனியில் நடைபெற்றால் அவர்களின் கௌரவம் பாதிக்கும் வகையில் ஒலி, ஒளிப்பதிவு செய்தலாகாது, சபை அமர்வு வளாகத்திற்குள் வெற்றிலை உமிழ்தல், போதைப்பொருள் பாவித்தலாகாது மற்றும் மதுபோதையில் சபை அமர்வு வளாகத்திற்குள் வருகைதர முடியாது, குறித்த ஊடகவியலாளர் சபை உறுப்பினர் ஒருவரிடமிருந்தோ அல்லது பிறநபர் ஒருவரிடமிருந்தோ ஒலி, ஒளிப்பதிவுகளை பெற்று செய்தியாக வெளியிட முடியாது, அதாவது நேரடியாக பதிவு செய்யப்பட்ட ஒலி, ஒளிப்பதிவுகளை மட்டுமே செய்தியாக வெளியிட முடியும், தவிசாளர் வெளியேறுமாறு தீர்மானித்தால் உடனே வெளியேறவேண்டும், ஒழுக்கக்கேடான செயற்பாடுகளை முற்றுமுழுதாக தவிர்க்கவேண்டும்.
சபை அமர்வின்போது கேள்விகள் எழுப்பலாகாது.போன்ற நிபந்த்தனைகள் விதிக்கப் பாட்டிருந்தன. இதில் சபை அமர்வில் பங்குகொண்டபின்னர் எழுந்து நின்று ஒழிப்பதிவு செய்ய முடியாது என்ற நிபந்தனை தொடர்பாகவே தேசிய மக்கள் சக்தி உறுப்பினர்கள் சபையில் கேள்வி எழுப்பிய போது கடும் வாத பிரதி வாதங்கள் இடம் பெற்றது. சபை அமர்வு நிறைவடைந்த பின்னர் ஊடகங்களுக்கு கருத்து தெரிவித்த வடமராட்சி தெற்கு மேற்கு பிரதேச சபை உப தவிசாளர் தியாகராசா தயாபரன் சபையை குழப்பும் நோக்குடன் கொண்டுவரப்பட்ட குற்றச்சாட்டு என்று இதனை மறுத்திருந்தார். எனினும் இன்றைய அமர்வில் ஊடகவியலாளர்களை உறுதிப்படுத்தி இனிவரும் அமர்வுகளில் அனுமதிப்பது உட்பட பல தீர்மானங்கள் நிறைவேற்றப் பட்டது.
