கோட்டை புகையிரத நிலையத்திற்கு முன்பாக பொலிஸாருக்கும் ஆர்ப்பாட்டக்காரர்களுக்கும் இடையில் மோதல்!
கோட்டை புகையிரத நிலையத்திற்கு முன்பாக பொலிஸாருக்கும் ஆர்ப்பாட்டக்காரர்களுக்கும் இடையில் மோதல்!
===========
கொழும்பு கோட்டை புகையிரத நிலையத்திற்கு முன்பாக இன்று (25) 'ஜன அரகலய' இயக்கத்தினால் ஏற்பாடு செய்யப்பட்டிருந்த போராட்டத்தின் போது கடுமையான பதற்ற நிலை ஏற்பட்டுள்ளது.
ஆர்ப்பாட்டத்தில் ஈடுபட்டவர்களுக்கும், அங்கிருந்த பொலிஸாருக்கும் இடையில் ஏற்பட்ட கடுமையான தள்ளுமுள்ளு மற்றும் மோதலைத் தொடர்ந்தே இந்த பதற்றமான சூழல் உருவாகியுள்ளது.
சர்வதேச நாணய நிதியத்தின் (IMF) திட்டத்தின் கீழ் விதிக்கப்பட்டுள்ள நிபந்தனைகள் மற்றும் இலங்கையில் நிலவும் கடுமையான வாழ்க்கைச் செலவு அதிகரிப்பு உள்ளிட்ட பல கோரிக்கைகளை முன்வைத்து இந்த கண்டனப் போராட்டம் முன்னெடுக்கப்பட்டமை குறிப்பிடத்தக்கது.
