ஓய்வு நிலை விரிவேரையாளர் ஏ ஜமால்தீனுக்கு இந்தியாவில் கௌரவ பேராசிரியர் பட்டம்...!!
🔵 ஓய்வு நிலை விரிவேரையாளர் ஏ ஜமால்தீனுக்கு இந்தியாவில் கௌரவ பேராசிரியர் பட்டம்...!!
எஸ் ஜே புஹாது
இலங்கை தென்கிழக்கு பல்கலைக்கழக ஓய்வு நிலை விரிவேரையாளர் நிந்தவூரைச் சேர்ந்த ஏ ஜமால்தீன் இந்தியாவில் நடைபெறும் சர்வதேச சாதனையாளர் விருது வழங்கும் விழாவில் கௌரவ பேராசிரியர் பட்டம் வழங்கி கௌரவிக்கப்பட உள்ளார்
இந்தியாவின் புதுடில்லியில் நடைபெறும் இந்த சர்வதேச சாதனையாளர் விருது வழங்கும் விழாவில் கௌரவ பேராசிரியர் விருதைப் பெற்றுக் கொள்வதற்காக டாக்டர் ஏ. ஜமால்தீன் இன்று 27.03.2026 அதிகாலை 3 மணிக்கு இந்தியா நோக்கிப் பயணமானார் ண
2026 ஆம் ஆண்டின் "சுற்றுலா மற்றும் விருந்தோம்பல் மேலாண்மை மற்றும் சந்தைப்படுத்தல் மேலாண்மை" பிரிவில் மிகச் சிறந்த பங்களிப்பிற்கான சர்வதேச சாதனையாளர் விருது வழங்கும் விழா எதிர்வரும் 29 மார்ச் 2026
இந்தியா புது டில்லியில் நடைபெற உள்ளது
இந்த நிகழ்வில் உன்னதமான சுற்றுலா மற்றும் விருந்தோம்பல் மேலாண்மை மற்றும் சந்தைப்படுத்தல் மேலாண்மை துறையில் கௌரவ பேராசிரியர் (CGU) விருதைப் பெற்றுக் கொள்ள முன்னாள் தென்கிழக்கு பல்கலைக்கழக சிரேஷ்ட விரிவுரையாளர் டாக்டர் ஏ. ஜமால்தீன் அவர்களுக்கு ஏசியன் நியூஸ் ஊடக வலையமைப்பின் சார்பில் வாழ்த்துக்கள்
