Breaking News

இரண்டு பயனாளிகளின் வீட்டிற்கு அடிக்கல் நாட்டிய ரஜீவன் mp..!

 இரண்டு பயனாளிகளின் வீட்டிற்கு அடிக்கல் நாட்டிய ரஜீவன் mp..!



யாழ்ப்பாணம் வடமராட்சி வடக்கு பிரதேச செயலர் பிரிவிற்கு உட்பட்ட இரண்டு பயனாளிகளுக்கு அரசாங்கத்தின் வீட்டு திடடத்திற்கு யாழ்ப்பாணம் மாவட்ட பாராளுமன்ற உறுப்பினரும், வடமராட்சி அபிவிருத்தி குழு தலைவருமான ரஜீவன் நேற்று பிற்பகல் சுப வேளையில் அடிக்கல் நாட்டிவைத்தார்.


குறித்த நிகழ்வுகள் வடமராட்சி வடக்கு பிரதேச செயலர் ந.திருலிங்கநாதன் தலைமையில் இடம்பெற்றது.


சுபச்செல்வன் 


பொலிகண்டியை சேர்ந்த ஆறுமுகம் மனோகரன், புற்றளையை சேர்ந்த இந்திராஜித் ரஞ்சித்குமார் ஆகிய இருவரது வீட்டிற்கான அடிக்கல்லே நேற்று பாராளுமன்ற உறுப்பினர் ரஜீவனால் நாட்டிவைக்கப்பட்டது.


இந் நிகழ்வில் பருத்தித்துறை பிரதேச சபை உறுப்பினர் புலோலியூர் ரமணன், தேசிய மக்கள் சக்தி வடமராட்சி அமைப்பாளர் கணேசரூபன், வடமராட்சி வடக்கு பிரதேச திட்டமிடல் பணிப்பாளர் சுபச்செல்வன், கிராம சேவகர் உட்படட பிரதேச செயலக உத்தியோகத்தர்கள், பிரதேச மக்கள் என பலரும் கலந்துகொண்ட

னர்.