சிறப்பாக இடம்பெற்ற யா/புற்றளை மகா வித்தியாலயத்தின் வருடாந்த இல்ல மெய் வல்லுநர் போட்டி..!
சிறப்பாக இடம்பெற்ற யா/புற்றளை மகா வித்தியாலயத்தின் வருடாந்த இல்ல மெய் வல்லுநர் போட்டி..!
யா/புற்றளை மகா வித்தியாலயத்தின் வருடாந்த இல்ல மெய் வல்லுநர் போட்டி நேற்று வெள்ளிக்கிழமை பிற்பகல் 1:30 மணியளவில் பாடசாலை மைதானத்தில் பாடசாலை அதிபர் ஞானசேகரம் ரவிக்குமார் தலைமையில் இடம்பெற்றது. இதில் முதல் நிகழ்வாக விருந்தினர்கள் மாலை அணிவிக்கப்பட்டு வரவேற்கபட்டத்தை தொடர்ந்து மங்கல சுடர்கள் ஏற்றப்பட்டு நிகழ்வுகள் ஆர்ம்பமாகின.
இதில் வெற்றியீட்டிய மாணவர்களுக்கான பரிசிகள், சான்றிதழ்களையும், கருந்துரைகளையும், நிகழ்வின் பிரதம விருந்தினராக கலந்துகொண்ட கல்முனை வடக்கு ஆதார வைத்தியாசலை விபத்து மற்றும் அவசர சிகிக்சை பிரிவு பொறுப்பு வைத்திய அதிகாரி Dr.வாமதேவன் பேரின்பரூபன், திருமதி
சாந்தப்பிரியா பேரின்பரூபன், உட்பட பலரும் வழங்கி கௌரவித்தனர்.
இந் நிகழ்வில் பாடசாலை அதிபர், ஆசிரியர்கள், பழைய மாணவர்கள், பெற்றோர்கள், நலன்விரும்பிகள், அயல் பாடசாலை அதிபர்கள் என பலரும் கந்துகொண்டு சிறப்பித்தனர்.
