Breaking News

பயங்கரவாத தடுப்பு சட்டத்தினை அகற்றுதல் எனும் பெயரில் மிக கொடிய அடக்கு முறை சட்டத்தினை கொண்டு வரும் தேசிய மக்கள் சக்தி....! ஜனநாயக போராளிகள் கட்சி தலைவர் வேந்தன்


பயங்கரவாத தடுப்பு சட்டத்தினை அகற்றுதல் எனும் பெயரில் மிக கொடிய அடக்கு முறை சட்டத்தினை கொண்டு வரும் தேசிய மக்கள் சக்தி....! ஜனநாயக போராளிகள் கட்சி தலைவர் வேந்தன் 



உலக நாடுகள் மற்றும் i.m.f உட்பட்ட பல சர்வதேச அமைப்புக்கள் இலங்கை அரசிடம் பயங்கரவாத தடுப்பு சட்டத்தினை நீக்க கோரியும் மற்றும் இந்த அரசாங்கத்தின் தேர்தல் வாக்குரிதியின் முக்கிய அம்சமாக காணப்படும் பயங்கரவாத தடுப்பு சட்டத்தினை அகற்றுதல் என்பதே இதனை மையப்படுத்தி 


இந்த அரசாங்கம் மிகப்பெரிய சட்ட மூலத்தினை வெளியிட்டு உள்ளது என ஜனநாயக போராளிகள் கட்சி தலைவர் வேந்தன் ஊடகங்களுக்கு கருத்து தெரிவித்துள்ளார் 


இவ் சட்ட மூலம் மூலம் மேலும் அவர் கூறுகையில் 


தனிமனிதன் மற்றும் பொது அமைப்புகள் ஊடகம் சார்ந்தோரின் அடிப்படை கருத்து சுதந்திரம் கோரிக்கை அடிப்படையில் முற்றாக ஒடுக்கப்படுவதாகவும் ஓர் அடக்கு முறைக்கு உள்ளாகும் ஒரு குடும்பம் அல்லது சமூகம் தமது கருத்தை வெளியில் கொண்டு செல்ல முடியாத அளவுக்கு உள்ளது 


தொடர்ந்து பயங்கரவாத சட்டம் நிறைவேற்ற பட்ட காலத்தில் இருந்து அதிகமாக தமிழ் மக்களே அந்த பிடியில் அழுத்தப்பட்டு தண்டனை அனுபவித்து வந்துள்ளனர் 


குறிப்பாக முன்னாள் போராளிகள் சமூக செயற்பாட்டாளர்கள் ஊடகவியலாளர்கள் மத தலைவர்கள் என கூறிக்கொண்டே போகலாம் இதனை ஓர் இனத்தின் மீது ஆயுதம் ஏந்தாமல் கட்டவிழ்த்து விடப்பட்ட ஒரு வன்முறை என கருதியே பல பொது அமைப்புகளின் கோரிக்கை மற்றும் உலக நாடுகளின் அழுத்தம் என்பதாலே இந்த சட்ட கோர்வை கொண்டு வரப்பட்டுள்ளது 


ஆனாலு அதனை விடவும் பல மடங்கு மோசமாக இந்த சட்ட கோர்வை காணப்படுகிறது முக்கியமாக சட்டத்தின் பெயரில் கருத்து சுதந்திரத்தை முற்றாக அழித்து ஒரு சர்வதிகார போக்கை திணிப்பதே இதன் அடிப்படை போக்கு ஆகும் 


மற்றும் உலக நாடுகளில் தாம் தேர்தல் வாக்குரிமையை நிறைவேற்றி விட்டோம் ஆனாலும் மக்கள் தாங்கள் கொண்டு வந்த புதிய சட்ட கோர்வையை ஏற்று கொள்ள வில்லை அதனால் பழய பயங்கரவாத தடுப்பு சட்டம் இருக்கட்டும் என கூறுகின்றார்கள் எனும் ராஜதந்திர போக்கிலே இவ்வாறான ஒரு மோசமான சட்ட கோர்வையை கொண்டு வந்துள்ளனர் தேசிய மக்கள் சக்தியினர் 



தமிழ் மக்கள் கேட்பது எமக்கு எந்த பயங்கரவாத தடுப்பு சட்டமும் தேவையில்லை என்பதே என ஜனநாயக தமிழ் தேசிய கூட்டணியின் இணை தலைவரும் ஜனநாயக போராளிகள் கட்சி தலைவருமான வேந்தன் அவர்கள் தெரிவித்துள்ளார்