Breaking News

கட்டு துவக்கில் சிக்கி சுண்டிக்குளத்தில் குடும்பஸ்தர் படுகாயம்



கட்டு துவக்கில் சிக்கி சுண்டிக்குளத்தில் குடும்பஸ்தர் படுகாயம்



யாழ்ப்பாணம் வடமராட்சி கிழக்கு சுண்டிக்குள பகுதியில் கட்டு துவக்கு வெடித்து நபர் ஒருவர் காயமடைந்துள்ளார்


சம்பவம் தொடர்பில் மேலும் தெரிய வருகையில்,


வடமராட்சி கிழக்கு சுண்டிக்குள பகுதியில் அமைந்துள்ள சிறு கடலில் இரால் பிடிப்பதற்காக கேவில் பகுதியைச் சேர்ந்த குடும்பஸ்தர் ஒருவர் சென்றுள்ளார்

இதன் போது அங்கு மிருகங்களை வேட்டையாடுவதற்கு பொருத்தப்பட்டிருந்த கட்டு துவக்கு எனப்படும் வெடி மருந்தில் சிக்கி நேற்று(5) காயம் அடைந்துள்ளார்


காயமடைந்தவர் உடனடியாக பளை வைத்தியசாலைக்கு கொண்டு செல்லப்பட்டு அங்கிருந்து மேலதிக சிகிச்சைக்காக கிளிநொச்சி வைத்தியசாலைக்கு மாற்றப்பட்டுள்ளார்


கருப்பையா பத்மநாதன் என்னும் குடும்பஸ்தரே இவ்வாறு கட்டு துவக்கில் சிக்கி காயமடைந்தவர் ஆவார்


அண்மைய காலங்களிலும் சட்டவிரோதமாக மிருகங்களுக்கு வைக்கப்படும் வெடி மருந்துகளில் சிக்கி பொதுமக்கள் காயமடைந்த சம்பவங்களும் சுண்டிக்குளம் பகுதியில் பதிவாகிய நிலையில் நேற்றும் இந்த சம்பவம் இடம்பெற்றுள்ளது


சம்பவம் தொடர்பாக விசாரணைகளை மருதங்கேணி பொலிசார் மேற்கொண்டு வருகின்றனர்.