பருத்திதுறை ஆதார வைத்தியசாலை வீதியில் கனரக வாகனம் செல்லத்தடை, பருத்திதுறை பிரதேச சபை அறிவித்தல் பலகை...!
பருத்திதுறை ஆதார
வைத்தியசாலை வீதியில் கனரக வாகனம் செல்லத்தடை, பருத்திதுறை பிரதேச சபை அறிவித்தல் பலகை...!
மந்திகையில் அமைந்துள்ள பருத்தித்துறை ஆதார வைத்தியசாலைக்கு முன்புள்ள வீதியால் கனரகவாகனம் செல்வதற்கு தடைவிதிக்கவேண்டும் என்னும் பிரேரணை பருத்தித்துறை பிரதேச
சபையில் ஏகமனதான அண்மையில் நிறைவேற்றப்பட்டிருந்தது.
குறித்த தீர்மானத்துக்கமைய நேற்றைய தினம் மந்திகை வைத்தியசாலைக்கு முன்புள்ள வீதியில் கனரகவாகனங்கள் செல்வதற்கு முற்றாக தடைவிதித்து பருத்தித்துறை பிரதேச சபையால் அறிவித்தல் பலகை நாட்டிவைக்கப்பட்டுள்ளது.
