Breaking News

தையிட்டியில் தொடரும் போராட்டம்....! கலந்து கொண்ட பொது மக்களின் சுய விபரங்கள் பாதுகாப்பு பிரிவினால் சேகரிப்பு

 தையிட்டியில் தொடரும் போராட்டம்....! கலந்து கொண்ட பொது மக்களின் சுய விபரங்கள் பாதுகாப்பு பிரிவினால் சேகரிப்பு .....!









சட்டவிரோதமாக தனியார் காணிகளில் அமைக்கப்பட்ட தையிட்டி திஸ்ஸ விகாரை முன்பாக காணி உரிமையாளர்கள் போராட்டத்தை மேற்கொண்டு வருகின்றனர்.



இதனையடுத்து பொலிஸார் பெருமளவில் பேருந்துகளில் அழைத்து வரப்பட்டு குவிக்கப்பட்டுள்ளனர்.




தையிட்டி விகாரையில் இன்றைய தினம் 1/3 பௌர்ணமி தினத்தினை முன்னிட்டு புதிதாக புத்தர் சிலை ஒன்றினை நிறுவும் நோக்குடன் சிகிரியாவில் இருந்து புத்தர் சிலை ஒன்று கொண்டு வர முயற்சிகள் முன்னெடுக்கப்பட்டதாக தகவல் வெளியாகியிருந்தமை குறிப்பிடத்தக்கது





இவ் ஆர்ப்பாட்டத்தில் சமூக செயற்பாட்டாளர்கள் மற்றும் பொது அமைப்புகளின் பிரதிநிதிகள் பொது மக்கள் என பலரும் கலந்து கொண்டனர் மற்றும் போராட்டத்தில் கலந்து கொண்ட நபர்களின் சுய விபரங்கள் பாதுகாப்பு படையினரால் சேகரிக்க பட்டது தகவல்கள் தெரிவிக்கின்றன 


மற்றும் போராட்டத்தில் கலந்து கொண்ட மக்கள் தமது பாதுகாப்பு தொடர்பாக அச்சத்தில் உள்ளனர்