Breaking News

கட்டைக்காடுடன் நிறுத்தாமல் கேவில்வரை சேவையில் பேருந்துகள் ஈடுபட வேண்டும்-ரஜுவன் எம்பி

 கட்டைக்காடுடன் நிறுத்தாமல் கேவில்வரை சேவையில் பேருந்துகள் ஈடுபட வேண்டும்-ரஜுவன் எம்பி



வடமராட்சி கிழக்கில் சேவையில் ஈடுபடும் பேருந்துகளை மக்களின் நலன் கருதி கேவில்வரை செல்லுமாறு வடமராட்சி கிழக்கு பிரதேச ஒருங்கிணைப்பு தலைவரும்,பாராளுமன்ற உறுப்பினருமான ரஜூவன் எம்பி பணித்துள்ளார் 


நேற்றைய தினம் கேவில் நித்தியவெட்டை பிரதான வீதி புனரமைப்பிற்கான அடிக்கல்வைக்கும் நிகழ்வில் கலந்து கொண்ட போதே அவர் இதனை தெரிவித்துள்ளார் 


ஒரு சில நாட்கள் கேவில் வரை பேருந்துகள் சேவையில் ஈடுபட்டு பின்பு அதை கட்டைக்காட்டுடன் நிறுத்திக் கொள்வதாக ஊடகவியலாளர் ஒருவரால் ரஜூவன் எம்பியிடம் கேள்வி எழுப்பப்பட்டது 


அவ்வாறு ஒரு சில நாட்கள் கேவில் வரை சேவையில் ஈடுபடுவது தவறு என்றும் உரியவர்கள் உரிய முறையில் மக்களுக்கு சேவை வழங்க வேண்டும் என்றும் குறித்த வீதி புனரமைப்பிற்கு பின் போக்குவரத்து தேவை முழுமையாக பூர்த்தி அடையும் என்றும் ரஜுவன் எம்பி தெரிவித்தார்