வடமராட்சி கிழக்கில் அனர்த்தத்தால் பாதிக்கப்பட்ட இடங்களை பார்வையிட்ட பாராளுமன்ற உறுப்பினர் ரஜீபன்.....!
வடமராட்சி கிழக்கில் அனர்த்தத்தால் பாதிக்கப்பட்ட இடங்களை பார்வையிட்ட பாராளுமன்ற உறுப்பினர் ரஜீபன்.....!
கடந்த சில நாட்களுக்கு முன் சீரற்ற காலநிலை காரணமாக இலங்கை முழுவதும் பாரியளவு பிரதேசங்கள் பாதிக்கப்பட்ட நிலையில்
யாழ்ப்பாணம் வடமராட்சி கிழக்கு பிரதேச செயலகத்திற்கு உட்பட்ட பகுதிகளும் பல பாதிப்புகளுக்கு உள்ளான அனர்த்தம் காரணமாக செம்பியன் பற்று வடக்கு பகுதியில் ஒரு உயிர் சேதமும் ஏற்பட்டது குறிப்பிடத்தக்கது
அந்த வகையில் பாராளுமன்ற உறுப்பினரும் வடமராட்சி கிழக்கு அபிவிருத்தி குழு தலைவருமான ரஜீபன் அவர்கள் இன்றைய தினம் வடமராட்சி கிழக்கு பகுதியில் விசேட சுற்று பயணத்தை மேற்கொண்டார்
அவர் முதலில் வடமராட்சி கிழக்கு பிரதேச செயலகத்தில் விசேட கலந்துரையாடல் ஒன்றினை ஏற்பாடு செய்து அனர்த்த முகாமைத்துவ உதவிகள் மற்றும் இனிவரும் காலங்களில் அனர்த்தத்தால் ஏற்படும் பாதிப்பை குறிகிய காலம் மற்றும் நீண்ட காலத்திற்கு எவ்வாறு கட்டுப்படுத்துவது என ஆலோசனை செய்ததன் பின்னர்
வடமராட்சி கிழக்கு மருதங்கேணி பிரதேச வைத்தியசாலைக்கு சென்று வைத்தியருடன் கலந்துரையாடல் செய்ததன் பின்னர் வைத்தியசாலையில் அண்மைக்காலமாக எதிர் நோக்கும் பிரச்சனைகள் தொடர்பாகவும் வைத்தியசாலை வளாகம் முழுவதும் நீர் தேங்கி நிற்கும் இடங்களையும் பார்வையிட்டு அதற்கான தீர்வுகளை உடனடியாக எடுப்பதற்கான நடவெடிக்கைகளை மேற்கொள்வதாகவும் வாக்குறுதி அளித்தார்
பின்னர் கட்டைக்காடு நாகர் கோவில் மருதங்கேணி உடுத்துறை வத்திராயன் போன்ற இடங்களுக்கு சென்று அனர்த்தத்தால் பாதிக்கப்பட்ட குடுய்பங்களை நேரில் சந்தித்து அவர்கள் எதிர் நோக்கும் பிரச்சனைகள் தொடர்பாகவும் கேட்டரிந்து சென்றார்
இவ் விசேட சுற்றுப்பயணமானது பாராளுமன்ற உறுப்பினர் ரஜீபன் அவர்களின் நேரடி இனைப்பளர் உதய பாஸ்கரன் அவர்களின் ஏற்பாட்டில் இடம்பெற்றது
