பொற்பதி கொலண்ட் பழையமாணவர்கள் அனுசரணையில் 74 குடும்பங்களுக்கு இடர்கால உதவி..!
பொற்பதி கொலண்ட் பழையமாணவர்கள் அனுசரணையில் 74 குடும்பங்களுக்கு இடர்கால உதவி..!
யாழ்ப்பாணம் வடமராட்சி கிழக்கு பொற்பதி றோமன் கத்தோலிக்க தமிழ் கலவன் பாடசாலை பழைய மாணவர்களால் அண்மைய அனர்த்தத்தால் பாதிக்கப்பட்ட அதே கிராமத்தை சேர்ந்த பொற்பதி கொலண்ட் பழையமாணவர்கள் அனுசரணையில் 74 குடும்பங்களுக்கு இடர்கால உதவியாக உலர் உணவு பொதிகள் இன்று வழங்கி வைக்கப்பட்டன. குறித்த நிகழ்வு பாடசாலை அதிபர் சி.குகதாசன் தலைமையில் பொற்பதி கிராம சேவையாளர் அலுவலகத்தில்
இடம் பெற்றது.
இதில் பொற்பதி கிராம சேவைபாளர், பொற்பதி பொருளாதார உத்தியோகத்தர், பழைய மாணவர்கள் என பலரும் கலந்து கொண்டிருந்தனர்
