மீண்டும் இனந்தெரியாத நபர்களால் தாக்கப்பட்ட பச்சிளைப்பள்ளி ஜனநாயக தமிழ் தேசிய கூட்டணியின் வேட்பாளர்.....!
மீண்டும் இனந்தெரியாத நபர்களால் தாக்கப்பட்ட பச்சிளைப்பள்ளி ஜனநாயக தமிழ் தேசிய கூட்டணியின் வேட்பாளர்.....!
கிளிநொச்சி பச்சிளைப்பள்ளி பகுதியில் நேற்றைய தினம் 12/12/2025 அன்று மாலை 6 30 மணியளவில் இனந் தெரியாத நபர்களால் வழி மறித்து பச்சிளைப்பள்ளி பிரதேச சபையின் முகாவில் வட்டாரத்தின் ஜனநாயக தமிழ் தேசிய கூட்டணியின் வேட்பாளரான விதூசிகன் தாக்கப்பட்டுள்ளார்
இச் சம்பவம் தொடர்பாக மேலும் தெரிய வருவதாவது .
நேற்றைய தினம் மருதங்கேணி புதுக்காடு இடைப்பட்ட வீதியின் இடையில் பயணித்து இருந்த குறித்த நபரை வழிமறித்த இனந்தெரியாத கும்பல் ஒன்று மரக்கட்டை மற்றும் கம்பிகளால் குறித்த நபரை தாக்கி உள்ளனர்
தாக்குதலின் போது வேட்பாளரின் மோட்டார் வாகனம் பாரியளவு தாக்குதலுக்கு உள்ளாகி உள்ளதோடு குறித்த நபரும் காயங்கள் மற்றும் அவரின் பிரதானமான ஆவணங்கள் பறிமுதல் உள்ளாகி உள்ளார்
இச் சம்பவம் தொடர்பாக தாக்குதலுக்கு உள்ளான நபர் குறிப்பிடுகையில்
இவ்வாறு தாம் கடந்த காலங்களில் இவ்வாறு இனந் தெரியாத நபர்களால் மிரட்டல்களுக்கு உள்ளாகி வருவதாகவும் இச் சம்பவத்தின் போது வீதியால் பயணித்த மக்கள் வராது இருந்தால் தனது உயிர் போய் இருக்கும் என தெரிவித்துள்ளார்
மற்றும் இது அரசியல் பழிவாங்கும் நோக்கில் திட்டம் இடப்பட்டு நடத்தப்பட்ட தாக்குதல் எனவும் இச் சம்பவம் தொடர்பாக மேலதிக விசாரணைகளை பளை பொலிஸார் மற்றும் மருதங்கேணி பொலிசார் மேற்கொண்டு வருகின்றனர் என தெரிவித்துள்ளார்


