சந்தை விபரம், தொடரும் பரபரப்பு..!
சந்தை விபரம், தொடரும் பரபரப்பு..!
பருத்தித்துறை நகரசபையின் புதிய சந்தை நேற்றிலிருந்து தற்காலிகமாக மூடப்படுவதாக பருத்தித்துறை நகரபிதா புதிய சந்தை வாயிலில் இன்று அறிவித்தலை ஒட்டியுள்ளார்.
மீண்டும் மரக்கறி சந்தைக்கு வர்த்தகர்கள் நேற்று முன்தினம் வியாழக்கிழமை தாமாகவே சென்று வியாபாரம் செய்வதற்கு சென்றுள்ள நிலையில் ஐந்து மரக்கறி வியாபாரிகள் புதிய சந்தையில் வியாபாரம் மேற்கொண்டு வந்தனர். இந்நிலையில் சபை தவிசாளர் நேற்று வெள்ளிக்கிழமை புதிய சந்தை தற்காலிகமாக பூட்டப்படவுள்ளதாகவும் நவீன சந்தை தொகுதிக்கு செல்லுமாறு கூறியிருந்த நிலையில் அவர்கள் பழைய இடமான நவீன சந்தை தொகுதிக்கு செல்லாத நிலையில் இன்று அதிகாலையில் புதிய சந்தை தொகுதி பூட்டு போட்டு பூட்டப்பட்டதுடன் காலை எட்டுமணியளவில் தவிசாளர் குறித்த புதிய சந்தை தொகுதி தற்காலிகமாக மூடப்படுவதாக அறிவித்தல் ஒட்டியுள்ளனர். எனினும் எஞ்சியுள்ள புதிய மரக்கறி சந்தை வியாபாரிகள் நவீன சந்தை தொகுதிக்கு செல்ல மாட்டோம் என சந்தை வாயிலில் உள்ளனர்.
சந்தை விவகாரம் பருத்தித்துறை நகரில் பரபரப்பாகவுள்ளது
.
