சமூக மாற்றத்திற்கான ஊடக மைய்யத்தின் ஏற்பாட்டில் பனம் விதை நடுகை...!
சமூக மாற்றத்திற்கான ஊடக மைய்யத்தின் ஏற்பாட்டில் பனம் விதை நடுகை...!
சமூக மாற்றத்திற்க்கான ஊடக மைய்யத்தின் ஏற்பாட்டில் சமூக விஞ்ஞான ஆய்வு மைய்யமும், சமூக ஆர்வலர் ஒன்றியமும் இணைந்து பனம் விதை நடுகை இன்றைய தினம் வடமராட்சி கிழக்கு கொட்டோடை பகுதியில் மேற்கொள்ளப்பட்டுள்ளது.
இப் பனம்விதை நடுகையில் சமூக விஞ்ஞான ஆய்வு மைய்ய இயக்குநரும், சட்டத்தரணியும், அரசியல் ஆய்வாளருமான சி.அ.யோதிலிங்கம், சமூக விஞ்ஞான ஆய்வு மைய்ய செயற்பாட்டாளர்களான திரு.பகீரதன், சி.கமலகாந்தன் திரு.மரியசீலன்
ஜனநாயக போராளிகள் கட்சி தலைவர் சி.வேந்தன், சமூக மாற்றத்திற்க்கான ஊடக மைய்ய ஊடகவியலாளர்களான சி.த.காண்டீபன், பூ.லின்ரன் உட்பட பலரும் கலந்துகொண்டு பனம்விதைகளை நாட்டிவைத்தனர்.
