Breaking News

தமிழரசு கட்சி பெரியண்ணன் மனோநிலையிலிருந்துகொண்டு ஐக்கிய முன்னணி அமைப்பதற்கு அழைப்பு..! அரசியல் ஆய்வாளர் சி.அ.யோதிலிங்கம்

 தமிழரசு கட்சி பெரியண்ணன் மனோநிலையிலிருந்துகொண்டு ஐக்கிய முன்னணி அமைப்பதற்கு அழைப்பு..! அரசியல் ஆய்வாளர் சி.அ.யோதிலிங்கம்



தமிழரசு கட்சி இப்போதும் பெரியண்ணன் மனோநிலையிலிருந்து கொண்டுதான் ஐக்கிய முன்னணி அமைப்பதற்கு அழைப்பு விடுத்திருப்பதாக அரசியல் ஆய்வாளரும், சட்டத்தரணியும், சமூக விஞ்ஞான ஆய்வு மைய்ய இயக்குநாருமான சி.அ.யோதிலிங்கம் தெரிவித்துள்ளார். அவர் இன்று தனது அலுவலகத்தில் நடாத்திய சமகால அரசியல் தொடர்பான ஊடக சந்திப்பிலேயே இவ்வாறு தெரிவித்துள்ளார். பெரியண்ணன் மனோநிலை என்பது தமிழரசு கட்சி ஐக்கிய முன்னணியில் மேலாதிக்கம் செலுத்துவுடன் ஏனைய கட்சிகள் அதன் கீழ் இயங்குவது போன்றது என்றும் இது ஒரு ஐக்கிய முன்னணிக்கு பொருத்தமானது அல்ல என்றும் தெரிவித்துள்ளார் அவர் மேலும் தெரிவித்ததாவது 




இலங்கை தமிழரசு கட்சி கடந்த 5 ம் திகதி இடம் பெற்ற தனது மத்திய குழு கூட்டத்தில் ஒரு அறிவிப்பை வெளியிட்டிருக்கின்றது. 

ஜனநாயக தமிழ் தேசிய கூட்டணியோடு மட்டுமல்ல ஏனைய தமிழ் கட்சிகளுடனும் இணங்கிச் செயற்படபபோவதாக அறிவிப்பை வெளியிட்டிருக்கின்றது.

இது வரவேற்கப்படவேண்டிய விடயமாக இருந்தாலும் அவர்கள் அந்த அறிவிப்பை விடுத்தபோது ஒருவகையான நிபந்தனையையும் விதித்திருக்கின்றார்கள்.


தமிழரசு கட்சி தனது நிபந்தனைகள் என்ன என்பதை அவர்கள் தெளிவாக கூறவில்லை. தமிழரசு கட்டியின் நிலைப்பாடோடு இணங்கிவருவார்களானால் தாம் ஐக்கிய முன்னணுக்கு தயார் என்று தெரிவித்திருக்கின்றார்கள்.


பேச்சுவார்த்தைகள் தொடங்குவதற்கு முன்னரே நிபந்தனைகள் விதிப்பது பொருத்தமானது அல்ல என்று ஜனநாயக தமிழ் தேசிய கூட்டணியின் ஊடக பேச்சாளர் சுரேஷ் பிரேம சந்திரன் தெரிவித்திருக்கின்றார்.


பேசுவதற்கு முன்னர் நிபந்தனைகளை முன்வைப்பது ஒருநாளும் பொருத்தப்பாடாக இருக்காது என்று தெரிவித்திருக்கின்றார்.


உண்மையில் தமிழரசு கட்சி என்ன நினைக்கின்றது என்றால் பழைய தமிழ் தெரசிய கூட்டமைப்பு போன்று

ஒரு நிலைப்பாட்டு உருவாக்கத்தான் அது யோசிக்கின்றது.


பழைய தமிழ் தேசிய கூட்டமைப்பு என்பது தமிழரசு கட்சியின் மேலாதிக்கத்தின் கீழ் ஏனைய கட்சிகள் செயற்படவேண்டும் என்பதே.


அவ்வாறு இயங்குவதற்கு ஜனநாயக தமிழ் தேசிய கூட்டமைப்போ அல்லது தமிழ் தேசிய மக்கள் முன்னணியோ தயாராக இருப்பார்கள் என எதிர்பார்க்க முடியாது.  


இன்றைக்கு வடமாகாணத்தை பொறுத்தவரை மூன்று கட்சிகளும் ஏறத்தாள சமமான நிலையிலேதான் இருக்கின்றன. கிழக்கு மாகாணத்தில் வேறு நிலமை.



ஒரு ஐக்கிய முன்னணியை உருவாக்குவது என்றால் சில நிபந்தனைகள் இருப்பது அவசியம். ஒன்று மூன்று தரப்புக்களும் சமத்துவமாக மதிக்கப்பட வேண்டும். சமத்துவமாக செயற்பட ஒரு அமைப்பு பொறிமுறை வேண்டும்.  


தலமை என்பது கூட கூட்டுத்தலமையாக இருக்கலாமேயொழிய தனித்தலமையாக இருக்க முடியாது. அமைப்பு பொறிமிறையும் சமத்துவம் என்கின்ற நிலமையும், கொள்கை நிலைப்பாடும் இருக்கின்ற போதுதான் இந்த ஐக்கிய முன்னணி சிறப்பாக இயங்கும் இல்லை எனில் அந்த ஐக்கிய முன்னணி சிறப்பாக இயங்காது. இலங்கை தமிழசு கட்சி இப்போதும் பெரியண்ணன் மனோநிலையில் நின்று தமுழ்தேசிய கூட்டமைப்பால் இயங்க முயற்சிக்கின்றது. அப்படி எடுத்தால் அப்படி எனில் சிறப்பாக இயங்க வாய்பில்லை. தமிழரசு கட்சியை பொறுத்தவரை ஏற்கனவே ஜனநாயக தமிழ்த் தேசிய கூட்டணியும் தமிழ் தேசிய மக்கள் முன்னணியும் ஒரு உடன்படிக்கையில் கைச்சாத்திட்டுள்ளன.


அங்கு சமத்துவமான நிலையில்தான் அங்கு கைச்சாத்திடப்பட்டிருக்கின்றதுஅங்கு இது தமிழரசு கட்சியை தனிமைப்படுத்தியிருக்கின்றது. இது குறிப்பாக சுமந்திரன் அணியை தனிமைப்படுத்தியிருக்கிறது.



இவர்களோடு ஒத்துப் போகின்ற நிலமை சிறிதரன் அணிக்கு உண்டு. சுமந்திரன் அணியை தனிமைப்படுத்துகின்ற நிலமைதான் அங்கு காணப்படுகிறது. ஆகவே இந்த தனிமைப்படுத்தலை இல்லாமல் செய்வதற்க்காகவே ஜனநாயக தமிழ் தேசிய கூட்டமைப்போடும் தமிழ் தேசிய மக்கள் முன்னணியோடும் ஐக்கிய முன்னணி அமைப்பதற்க்கா அறிவித்திருக்கின்றனர். ஆகவே இது ஒரு ராஜதந்திர செயற்பாடகவே

 இருக்கும்.