Breaking News

வெள்ளத்தில் மிதக்கும் பளை பொதுச்சந்தை.....!

வெள்ளத்தில் மிதக்கும் பளை பொதுச்சந்தை.....!






பச்சிளைப்பள்ளி பளை பொது சந்தை ஆனது நேற்றைய தினமும் இன்றய தினமும் பெய்த கனமழை காரணமாக அதிக வெள்ளம் தேங்கி சந்தை நிலப்பரப்பு முழுவதும் வெள்ளத்தில் காணப்படுகின்றது 




இதனால் பச்சிளப்பள்ளி மக்கள் தமது அன்றாட தேவைகளை பூர்த்தி செய்வதற்காக தினமும் பொதுத்தனசந்தையில் காணப்படும் மரக்கறி சந்தை மற்றும் மீன் சந்தை என்பவற்றிற்கு தினமும் வருகை தருவது வழக்கமான விடயமாகும் 




இன்றைய தினம் மக்கள் தமது அன்றாட தேவைகளை பூர்த்தி செய்வதற்கு மிகவும் நெருக்கடியினை எதிர்நோக்கி வருகின்றனர் பொதுத் தந்தை சுற்றுச்சூழல் முழுவதும் வெள்ளம் வியாபித்து காணப்படுவதால் தமது பயண ஒழுங்குகளையும் தமது வர்த்தக செயற்பாடுகளையும் மேற்கொள்வதற்கு வெள்ளம் இடையூரவாக இருப்பதாகவும் பல தொற்று நோய் ஏற்படும் வாய்ப்புகள் உள்ளதாகவும் பச்சிளைப்பள்ளி மக்கள் தமது விசணத்தை தெரிவித்துள்ளனர் 




பச்சிளப்பள்ளி பொதுச்சந்தை ஆனது தற்போது புரனமைப்பு வேலைகள் நடைபெறுவதோடு ஆங்காங்கு கட்டிட பொருட்கள் குவித்த வண்ணமும் இருப்பதாகவும் இவ்வேளை திட்டங்களை மிக விரைவில் நிபர்த்தி செய்து தருமாறும் மக்கள் வேண்டி நிற்கின்றனர் 




பல காலமாக தாம் இப்ப பிரச்சினைக்கு முகம் கொடுப்பதாகவும் தமது பிரதேசத்தில் சிறிய அளவு மழை பெய்தாலும் பொதுச் சந்தை காணப்படும் பிரதேசத்தில் தாம் தமது அன்றாட செயல்பாடுகளை தொடர இடையூறாக இருப்பதாகவும் வெள்ளத்தினை கட்டுப்படுத்த ஏதாவது உடனடி நடவடிக்கையை செய்து தருமாறும் மக்கள் கேட்டு நிற்கின்றனர்.