இளைஞர் பரிமாற்று வேலை திட்டத்தின் கீழ் களுத்துறை இளைஞர்களால் கிளிநொச்சி பளை பகுதியில் செய்யப்பட்ட சிரமதானப் பணி....!
செய்தியாளர்
பூ.லின்ரன்(சர்வதேச ஊடகவியலாளர்)
இளைஞர் பரிமாற்று வேலை திட்டத்தின் கீழ் களுத்துறை இளைஞர்களால் கிளிநொச்சி பளை பகுதியில் செய்யப்பட்ட சிரமதானப் பணி....!
தேசிய இளைஞர் சேவைகள் மன்றத்தினால் ஏற்பாடு செய்யப்பட்டு நட பெற்று வரும் இளைஞர் பரிமாற்று வேலை திட்டத்தின் கீழ் களுத்துறை மாவட்டத்தை சேர்ந்த இளைஞர்கள் யுவதிகள் கிளிநொச்சி மாவட்டத்திற்கு வருகை தந்துள்ளனர்
வருகை தந்த இளைஞர் யுவதிகளால் இன்றய தினம் காலை 9:30 மணியளவில் மாசார் சிறுவர் ஆனந்த சுற்றுப்பகுதியில் சிரமதானப்பணி மேற் கொள்ளப்ட்டது
இவ் இளைஞர் யுவதிகளால் கிளிநொச்சி மாவட்டத்தில் பல்வேறு பட்ட செயற்பாடுகள் முன்னெடுக்க படவுள்ளதாகவும் குறிப்பாக மர நடுகை கலை கலாச்சாரம் சார்ந்த நிகழ்வுகள் உணவுப்பழக்கம் மற்றும் சமய வழிபாடுகள் திட்டம் இடபட்டுள்ளதாகவும் குறிப்பிட்டு உள்ளனர்
மற்றும் இவ் சிரமதான பணியில் கிளிநொச்சி மாவட்டத்திற்கு உட்பட்ட இளைஞர் சேவைகள் மன்ற உத்தியோகத்தர்கள் மற்றும் மாசார் கிராம அலுவலர் மற்றும் பச்சிளைப்பள்ளி பிரதேச சபை உறுப்பினர் சுஜீபன் கிராம மக்கள் என பலரும் கலந்து கொண்டனர்
