Breaking News

பாரதி வெற்றிக் கிண்ணம் கட்டைக்காடு சென்மேரிஸ் வசம்

 பாரதி வெற்றிக் கிண்ணம் கட்டைக்காடு சென்மேரிஸ் வசம்



யாழ்ப்பாணம் வடமராட்சி கிழக்கு உடுத்துறை பாரதி விளையாட்டு கழகம் நடாத்தும் மாபெரும் உதைபந்தாட்ட போட்டியின் 23 வயதுப் பிரிவினருக்கான இறுதி போட்டி நேற்று (5)இடம்பெற்றது


பாரதி விளையாட்டு கழக மைதானத்தில் பிற்பகல் 3:30 மணியளவில் குறித்த போட்டி ஆரம்பமானது 


இதில் கட்டைக்காடு சென்மேரிஸ் அணியை எதிர்த்து உடுத்துறை பாரதி அணி மோதி இருந்தது


பரபரப்பாக இடம் பெற்ற ஆட்டத்தின் இறுதியில் கட்டைக்காடு சென் மேரிஸ் அணி 01-0 என்ற கோல் கணக்கில் வெற்றி பெற்றது


கடைக்காடு சென்மேரிஸ் விளையாட்டு கழகம் சார்பாக அணியொலி அவர்கள் ஒரு கோலினை பெற்றுக் கொடுத்தார்


இறுதிப் போட்டியில் வெற்றி பெற்றதன் மூலம் பாரதி விளையாட்டு கழகத்தின் 23 வயது பிரிவினருக்கான வெற்றிக் கிண்ணத்தை கட்டைக்காடு சென் மேரிஸ் தனதாக்கிக்

 கொண்டது