மிக சிறப்பாக இடம்பெற்றது வடமராட்சி கிழக்கு பிரதேச இளைஞர் சம்மேளன இறுதி விளையாட்டு விழா.......!
செய்தியாளர்
பூ.லின்ரன்(சர்வதேச ஊடகவியலாளர்)
மிக சிறப்பாக இடம்பெற்றது வடமராட்சி கிழக்கு பிரதேச இளைஞர் சம்மேளன இறுதி விளையாட்டு விழா.......!
வடமராட்சி கிழக்கு பிரதேச செயலகத்திற்கு உட்பட்ட பதிவு செய்யப்பட்ட இளைஞர் கழகங்களுக்கான 2025ம் ஆண்டுக்கான மாபெரும் இறுதி போட்டி இன்றைய தினம் மாலை 3:30 மணியளவில் பிரதேச இளைஞர் சம்மேளன தலைவர் வி யெ நிதர்சன் தலைமையில் வத்திராயன் உதயசூரியன் விளையாட்டு மைதானத்தில் மிக சிறப்பாக இடம்பெற்றது
இவ் விளையாட்டு விழாவில் ஆரம்பத்தில் விருந்தினர்கள் அழைக்கப்பட்டு பின் விருந்தினர்களால் மங்கள விளக்கேற்றி வைத்து பின் தேசிய கீதம் ஒலிக்கபட்டது
அதனைத்தொடர்ந்து அண்மையில் யாழ்ப்பாணம் செம்மணி பகுதியில் இடம்பெற்ற கோர விபத்தில் அகால மரணம் அடைந்த வடமராட்சி கிழக்கு பிரதேச இளைஞர் சம்மேளனத்தின் முன்னாள் பொருளாதாரமும் தற்போதைய செந்தமிழ் இளைஞர் கழக உறுப்பினருமான யூட் மெரின் அவர்களுக்கு சிறிது நேரம் அக வணக்கம் மற்றும் மௌன அஞ்சலி செலுத்தப்பட்டது
அதனை தொடர்ந்து வடமராட்சி கிழக்கு இளைஞர் சம்மேளனத்தில் பதிவு செய்யப்பட்ட இளைஞர் கழகங்களுக்கான உதைபந்தாட்ட இறுதி போட்டியான மனற்காடு சென் அன்ரனிஸ் அணியினரை எதிர்த்து ஆழியவளை அருணோதய அணியினர் மோதினர்
இவ் போட்டியில் 1:0 எனும் கோல் கணக்கில் ஆழியவளை அருணோதய அணியினர் வெற்றியினை தமதாக்கி கொண்டனர்
பின் வடமராட்சி கிழக்கு பிரதேச இளைஞர் கழகங்களுக்கு இடையே நடத்தப்பட்ட சிறு விளையாட்டு மற்றும் பெரு விளையாட்டுக்களில் வெற்றியினை பெற்ற வீரர் வீராங்கனைகள் கௌரவிக்கப்பட்டு அவர்களுக்கு சான்றிதழ் மற்றும் வெற்றிக்கேடயங்கள் வழங்கி வைக்கப்பட்டது
இவ் நிகழ்வின் பிரதம விருந்தினராக செல்வி கோபிநாத் தாரனி உப பிரதேச செயலாளர் வடமராட்சி கிழக்கு அவர்களும் சிறப்பு விருந்தினராக திரு ச.கபில்ராம் விளையாட்டு உத்தியோகத்தர் வடமராட்சி கிழக்கு பிரதேச செயலகம் அவர்களும் திரு உ.நிதர்தன் முன்னாள் இளைஞர் பாராளுமன்ற உறுப்பினர் மற்றும் முன்னாள் தேசிய இளைஞர் சம்மேளன உறுப்பினர் அவர்களும் மற்றும் திரு ந.மே.பஸ்ரியன் யாழ் மாவட்ட இளைஞர் உதை பந்தாட்ட தலமை பயிற்றுவிப்பாளர் அவர்களும் கௌரவ விருந்தினராக வே.சதிகாந்த் பருத்தித்துறை பிரதேச சபை உறுப்பினர் அவர்களும் மற்றும் திரு கி.கணைச்செல்வன் பருத்தித்துறை பிரதேச சபை உறுப்பினர் அவர்களும் மற்றும் திரு க. சயந்தன் தேசிய இளைஞர் சம்மேளன யாழ் மாவட்ட பிரதி நிதி அவர்களும் மற்றும் திரு செ.கீர்த்தனன் உதவி பயிற்றுவிப்பாளர் யாழ் மாவட்ட உதைபந்தாட்ட ஆண்கள் அணி அவர்களும் கலந்து கொண்டனர்
