Breaking News

சரிந்து விழும் அபாயத்தில் பயணிக்கும் இலங்கை போக்குவரத்து சபைக்கு சொந்தமான பேருந்து....!



சரிந்து விழும் அபாயத்தில் பயணிக்கும் இலங்கை போக்குவரத்து சபைக்கு சொந்தமான பேருந்து....!




இன்றைய தினம் இலங்கை போக்குவரத்து சபைக்கு சொந்தமான பேருந்து ஒன்று முகமாலை மற்றும் கொடிகாம பகுதியில் அதிகளவான பயணிகளை ஏற்றிக்கொண்டு சரிந்து விழும் அபாயத்தில் செல்கிறமை தெரிய வந்துள்ளது 


இச் சம்பவம் தொடர்பாக மேலும் தெரிய வருவதாவது 



ஓர் பேரூந்தில் குறிப்பிட்ட பயணிகளை ஏற்றும் நிலையை கடந்து தற்போது அதிகளவான பயணிகளை ஏற்றிச் செல்லும் வழமை காணப்பட்டு வருகிறது 


குறிப்பாக அரச பேருந்துகள் சேவை நோக்கில் தமது பணியினை செய்வதனை முழுமையாக விட்டு விட்டு இலாப நோக்குடன் செயற்படுவதால் தற்போது பயணிகள் இவ்வாறன பிரச்சினைகளுக்கு முகம் கொடுக்க வேண்டிய நிலை ஏற்பட்டு வருகிறது 


மற்றும் இவ்வாறான செயற்பாடுகளால் தான் பாரியளவு விபத்துக்கள் ஏற்படுகிறது இதனை கவனத்தில் கொண்டு இதற்கான நடவெடிக்கைகளை அரசாங்கம் உடனடியாக எடுக்க வேண்டும்