Breaking News

மாபெரும் சுனாமி ஒத்திகை வடமராட்சியில்...!

 மாபெரும் சுனாமி ஒத்திகை வடமராட்சியில்...!



இந்து சமுத்திர பிராந்திய நாடுகளின் முன்னாயத்த நடவடிக்கைகளை மேம்படுத்துவதற்க்காக வருடாந்தம் ஒழுங்குசெய்யப்படுகின்ற பிராந்திய நாடுகளுக்கான சுனாமி ஒத்திகை பயிற்சி இன்று காலயே யா பருத்தித்துறை மெதடிஸ்த பெண்கள் பாடசாலையில் ஆரம்பமாகியது காலை 9:15 மணியளவில் சுனமி எச்சரிக்கை ஒலி ஒலிக்கப்பட்டதை தொடர்ந்து மாணவிகள் வகுப்பு வகுப்பாக அணிவகுக்கப்பட்ட அங்கு உரியவர்கள் அறுவுறுத்தப்பட்டு வடமராட்சி இந்து மகளிர் கல்லூரியில் இடைத்தங்கள் ஏற்பாடுகள் செய்யப்பட்டு அங்கு மருத்துவ வசதிகள், உணவு, உட்பட பல்வேறு வசதிகளும் ஏற்படு செய்யப்பட்டிருந்தன. வட இந்து மகளிர் கல்லூரியில் வகுப்பு வகுப்பாக மாணவர்கள் பிரிக்கப்பட்டு தங்கவைக்கப்பட்டதுடன் கிராம மக்களும தங்கவைக்கப்பட்டனர்.

பிரதேச செயலக அனர்த்த முகாமைத்துவ குழுவினரால் பதிவுகள் மேற்கொள்ளப்பட்ட பின்னரே மாணவர்கள் கிராம மக்கள் தங்க வைக்கப்பட்டனர்.

இதேவேளை ஒத்திகையின்போது பாதுகாப்பாக நகர்ந்த மக்கள் மணவர்களில் ஒருசிலரிற்கு சிறிய காயங்கள் ஏற்பட்டன. காயமடைந்தவர்களை இலங்கை செஞ்சிலுவைச் சங்கம், சென்ஜோன்ஸ் ஆம்புலன்ஸ் பருத்தித்துறை போலீசார் ஆகியோர் ஏற்றிவந்து வட இந்து மகளிர் கல்லூரியல் ஏற்பாடு செய்யப்பட்ட முதலுதவி சிகிச்சை நிலையத்தில் சிகிச்சையளிக்கப்பட்டனர்.

இவ் ஒத்திகை நிகழ்வில் வடமராட்சி வடக்கு பிரதேச செயலகம், இலங்கை செஞ்சிலுவைச் சங்கம், சென்ஜோன்ஸ் ஆம்புலன்ஸ் படைப்பிரிவு, பருத்தித்துறை ஆதார வைத்தியசாலை, பருத்தித்துறை போலீசார், கடற்படை, இராணுவம், சிறப்பு அதிரடி படை, பருத்தித்துறை மகரசபை தவிசாளர் மற்றும் உப தவிசாளர், கியூமெடிக்கா உட்பட பல்வேறு அமைப்புக்கள் திணைக்களங்கள் பங்குபற்றியிருந்தன.

இச் சுனமி ஒத்திகை நிகழ்வில் சுமார் 500 வரையான வடமராட்சி மெதடிஸ்த பெண்கள கல்லூரி மாணவர்கள் சுமார் 500 க்கு மேற்பட்டோரும் பொதுமக்கள் சுமார் 250 பேர் வரையும் கலந்துகொண்டுருந்தனர்.
குறித்த ஒத்திகை நிகழ்வு வருடாந்த இடம் பெறுவது குறிப்பிடத்தக்கது