பின் வாசலால் சென்ற தமிழரசுக்கட்சி: அநுரவிடம் கேட்டது இதைத் தான்..! அம்பலப்படுத்திய கஜேந்திரகுமார் எம்.பி
பின் வாசலால் சென்ற தமிழரசுக்கட்சி: அநுரவிடம் கேட்டது இதைத் தான்..! அம்பலப்படுத்திய கஜேந்திரகுமார் எம்.பி
ஒற்றையாட்சி அரசியலமைப்பையே தற்போது தமிழரசு கட்சி வலியுறுத்தி வருவதாக தமிழ்த் தேசியமக்கள் முன்னணியின் தலைவரும் நாடாளுமன்ற உறுப்பினருமான கஜேந்திரகுமார் பொன்னம்பலம் குற்றம் சுமத்தியுள்ளார்.
கொழும்பில் (Colombo) நேற்று நடத்திய ஊடகவியலாளர் சந்திப்பில் அவர் இந்த குற்றச்சாட்டை முன்வைத்தார்.
அண்மையில் ஜனாதிபதி அநுரகுமார திஸாநாயக்கவுக்கும் இலங்கைத் தமிழரசுக் கட்சிக்கும் இடையே நடைபெற்ற பேச்சு தொடர்பில் கருத்து வெளியிடும் போதே அவர் இவ்வாறு கூறினார்.
இந்த செயற்பாடானது தமிழ் மக்களுக்கு எதிராக இழைக்கப்படும் துரோகச் செயலாகும் என்றும் அவர் குறிப்பிட்டார்.
கடந்த தேர்தலில் தோற்றவர்கள் இப்போது பின் வாசலால் பிரவேசித்து தமிழரசுக் கட்சியில் அரசியல் செய்வதாகவும் அவர் கூறினார்.
தமிழரசுக் கட்சியின் எம்.பிக்களும் தமிழ் மக்களை ஏமாற்றி உள்ளார் என்றும் அவர் சுட்டிக்காட்டினார்.
ஜனாதிபதியுடன் அண்மையில் நடந்த சந்திப்பில் தமிழ் மக்கள் நிராகரித்து இலங்கைத் தமிழரசு கட்சியே கைவிட்டதாகக் கூறிய ஒற்றையாட்சி அரசியலமைப்பையே தற்போது வலியுறுத்தி வருவதாக கஜேந்திரகுமார் பொன்னம்பலம் தெரிவித்தார்.
