Breaking News

சந்நிதியான் ஆச்சிரம வாராந்த நிகழ்வாக மகாபாரத தொடர் சொற்பொழிவும், 350,000 ரூபா உதவிகளும்..!

 

சந்நிதியான் ஆச்சிரம வாராந்த நிகழ்வாக மகாபாரத தொடர் சொற்பொழிவும், 350,000 ரூபா உதவிகளும்..!

 


யாழ்ப்பாணம் வடமராட்சி தொண்டமனாறு சந்நிதியான் ஆச்சிரம சைவ கலை பண்பாட்டுப் பேரவையின் ஏற்பாட்டில் வாராந்தம் நடாத்தப்படும் நிகழ்வாக இன்றைய தினம் மகாபாரதம் தொடர்சொற்பொழிவு இடம் பெற்றது.


சந்நிதியான் ஆச்சிரம முதல்வர் சாதனைத் தமிழன் கலாநிதி மோகனதாஸ் சுவாமிகள் அவர்களின் தலைமையில் நேற்று வெள்ளிக்கிழமை சந்நிதியான் ஆச்சிரமத்தில் இடம் பெற்ற நிகழ்வில் ஆன்மீக உரையாக மகாபாரதம் என்ற தொடர் சொற்பொழிவினை ஆசிரியர் செஞ்சொற் செல்வர் .இரா.செல்வவடிவேல் அவர்கள் நிகழ்த்தினார்கள்.


இதெவேளை உதவிகளக சோந்தம்பை, கம்பர்மலையை சேர்ந்த விசேட தேவைக்குட்பட்ட குடும்பம் ஒன்றிற்கு மருத்துவ செலவிற்காக ரூபா 50,000 நிதியும், மாத்தறை பகுதியில் ஆலய மண்டப கட்டுமானப் பணிக்காக 1ம் கட்ட நிதயாக ரூபா 100,000 நிதியும், 

திருகோணமலை ஈச்சிலம்பற்று பிரதேசத்தில் அமைந்துள்ள எழுத்துக் கல்லுமலை முருகன் ஆலயத்திற்கான கும்பாபிஷேக நிகழ்வுக்காக ரூபா 150,000 திதியும் வழங்கிவைக்கப்பட்டதுடன் 

முகத்தான்குளம் ஸ்ரீ சித்தி விக்னேஸ்வரர் ஆலயத்தில் செட்டிக்குளம் அறநெறி ஒன்றியமும், செட்டிக்குளம் பிரதேச செயலகமும் இணைந்து நடத்தும் "தெய்வீக கிராம நிகழ்வின் அன்னதான செலவுகளுக்காக ரூபா 50,000 நிதியும் வழங்கிவைக்கப்பட்டது.

இந்நிகழ்வில் சந்நிதியான் ஆச்சிரம சைவ கலை பண்பாட்டு பேரவை நிர்வாகிகள், உறுப்பினர்கள், சந்நிதியான் ஆச்சிரம தொண்டர்கள், அடியவர்கள் நலன்விரும்பிகள் என பலரும் கலந்துகொண்டனர்.



21/11/2025 ந்திகதி வெள்ளிக்கிழமை

காலை இவ் நிகழ்வு 10.30 மணி தொடக்கம் 12.00 மணி வரை இடம்பெற்றது.