Breaking News

திருமலை ஸ்ரீ சண்முக இந்து மகளிர் கல்லூரிக்கு புதிய அதிபர் நியமனம்

 திருமலை ஸ்ரீ சண்முக இந்து மகளிர் கல்லூரிக்கு புதிய அதிபர் நியமனம்..!



திருகோணமலை ஸ்ரீ சண்முக இந்து மகளிர் கல்லூரிக்கு (தேசிய பாடசாலை) பொதுச்சேவை ஆணைக்குழுவின் அனுமதியுடன் கல்வி அமைச்சினால் புதிய அதிபராக திருமதி பாலராணி ஸ்ரீதரன் (SLEAS)BA, PGEDM, MED நியமிக்கப்பட்டுள்ளார். இவர்

1. யா/மத்திய கல்லூரி(தேசிய பாடசாலை) பிரதி அதிபர்

2. யா/வடமராட்சி மத்திய மகளிர் கல்லூரி அதிபர்

3. யா/மெதடிஸ்த பெண்கள் உயர்தரபாடசாலை

(தேசிய பாடசாலை) அதிபர்

4. உதவி கல்வி பணிப்பாளர், கல்வி அமைச்சு, தமிழ் பிரிவு.

5. கொ/ இராமநாதன் மகளிர் கல்லூரி (தேசிய பாடசாலை) தற்காலிக அதிபராக கடமையாற்றியிருந்தமை குறிப்பிடத்தக்கது.


இவரது சேவையை திருகோணமலை கல்விச் சமூகம் அன்புடன் வரவேற்பதுடன் எமது உளமார்ந்த வாழ்த்துகளையும் தெரிவித்துக்கொள்கின்றோம்.


இவர் தனது கடமையை விரைவில் பொறுப்பேற்பார் என்று கூறப்படுகின்றது.