Breaking News

யாழ். மாநகரசபையால் முன்னெடுக்கப்படும் வீதிகள் புனரமைப்பை ஆரம்பித்து வைத்த முதல்வர்


யாழ். மாநகரசபையால் முன்னெடுக்கப்படும் வீதிகள் புனரமைப்பை ஆரம்பித்து வைத்த முதல்வர்!



யாழ். மாநகரசபையின் 02ஆம் வட்டாரம் கலட்டி அம்மன் வீதி வேலைகளை யாழ். மாநகரசபை முதல்வர் வி.மதிவதனி வைபவ ரீதியாக ஆரம்பித்து வைத்தார்.


02ஆம் வட்டாரத்தின் ஜனநாயக தமிழ்த்தேசியக் கூட்டணியின் யாழ். மாநகர சபை உறுப்பினர் ப. தர்சானந் இனது அழைப்பின் பேரில் கலந்துகொண்ட முதல்வர் நேற்றையதினம் வீதி வேலைகளை ஆரம்பித்து வைத்தார்.


நிகழ்வில் வடமாகாண மகளிர் விவகார அமைச்சின் செயலாளர் நந்தகோபாலன், யாழ். மாநகரசபை பிரதி மேயர் இ.தயாளன், 02ஆம் வட்டார உறுப்பினர் ப. தர்சானந் மற்றும் முதல்வரின் தனிச் செயலாளர் செல்வி.பானுஜா ஆகியோர் கலந்து கொண்டனர்.