Breaking News

தமிழர் பகுதியில் கிணற்றில் தவறி விழுந்த குடும்ப பெண்..!

 தமிழர் பகுதியில் கிணற்றில் தவறி விழுந்த குடும்ப பெண்..!



கிணற்றில் தவறி விழுந்த வயோதிப் பெண் ஒருவர் உயிரிழந்துள்ளதாக பொலிஸார் தெரிவித்துள்ளனர்.


அராலி மேற்கு, வட்டுக்கோட்டையை சேர்ந்த 69 வயதுடையவரே இவ்வாறு உயிரிழந்துள்ளார்.


இது குறித்து மேலும் தெரியவருகையில், குறித்த பெண் கிணற்றில் இருந்து தண்ணீர் எடுப்பதற்காக முயற்சித்தவேளை கால் தவறி கிணற்றினுள் விழுந்து உயிரிழந்துள்ளார்.


அவரது சடலம் மீதான மரண விசாரணைகளை திடீர் மரண விசாரணை அதிகாரி மேற்கொண்டார். சாட்சிகளை வட்டுக்கோட்டை பொலிஸார் நெறிப்படுத்தினர்.