Breaking News

பாதாள குழுக்களுடன் தொடர்புடைய குழுவினரை ஒழித்துக்கட்டுவோம்..!

 பாதாள குழுக்களுடன் தொடர்புடைய குழுவினரை ஒழித்துக்கட்டுவோம்..!



பாதாள உலகக் குழுவினரை கூண்டோடு ஒழித்துக் கட்டியே தீருவோம் என பொதுமக்கள் பாதுகாப்பு அமைச்சர் ஆனந்த விஜேபால (Ananda Wijepala) எச்சரித்துள்ளார்.


அத்துடன் பாதாள உலகக் குழுவினர் இலங்கையின் அரசியலுக்குள்ளும் நுழைந்து விட்டனர் என அவர் சுட்டிக்காட்டியுள்ளார்.


ஊடகங்களிடம் கருத்து தெரிவித்த போதே ஆனந்த விஜேபால மேற்கண்டவாறு குறிப்பிட்டுள்ளார்.


அவர் மேலும் கூறுகையில், "இதுவரை கைது செய்யப்பட்டுள்ள பாதாள உலகக் குழு உறுப்பினர்களுக்கு நீதிமன்றத்தின் ஊடாக உரிய தண்டனை வழங்கப்படும்.


இவர்களுடன் தொடர்புடைய பொது நபர்கள், அரசியல்வாதிகள் எவரும் தப்ப முடியாது. அவர்கள் அனைவரையும் கைது செய்தே தீருவோம்.


உள்நாட்டிலும், வெளிநாடுகளிலும் தலைமறைவாகியுள்ள சகல பாதாள உலகக் குழுவினரையும் கைது செய்து சிறையில் அடைப்போம்.


இந்த ஆட்சியில் பாதாள உலகக் குழுவினரைக் கூண்டோடு ஒழித்துக் கட்டியே தீருவோம் என்றார்.


இதேவேளை, கணேமுல்ல சஞ்சீவா கொலை தொடர்பாக கொழும்பு மாவட்ட குற்றப் புலனாய்வுப் பிரிவின் காவலில் உள்ள இஷாரா செவ்வந்தி பல அதிரவைக்கும் தகவல்களை வெளியிட்டு வருகிறார்.


பாதுகாப்பு அமைச்சகம் கொழும்பு குற்றப்பிரிவுக்கு இஷாராவை 90 நாட்கள் தடுத்து வைத்து விசாரிக்க அனுமதி வழங்கி உள்ளது.


இந்த நிலையில் இஷாராவைப் போன்ற தோற்றமுடைய யுவதியை தேடிய யாழ்ப்பாண சுரேஷ், கெஹல்பத்தர பத்மேவின் அறிவுறுத்தலின் பேரில் தக்சி என்ற பெண்ணைச் சந்தித்ததாகக் கூறப்படுகிறது.


தக்சிக்கு சிங்களம் பேசத் தெரியாது என்பதனை சாதகமாக பயன்படுத்தி அவரை இந்த கும்பல் பயன்படுத்திக் கொண்டுள்ளதாக தகவல் கசிந்துள்ளது.


தக்சியை வெளிநாட்டுக்கு அனுப்புவதாகவும் ஏமாற்றிய சுரேஷ் அவரை நேபாளத்திற்கு அழைத்துச் சென்றதாக காவல்துறையினர் தெரிவித்துள்ளனர்.