அணையா விளக்கு தூபி உடைக்கப்பட்டதுக்கு வன்மையாக கண்டணம் தெரிவித்த ஜனநாயக போராளிகள் கட்சி தலைவர் வேந்தன்.....!
பூ.லின்ரன்
செய்தியாளர்
அணையா விளக்கு தூபி உடைக்கப்பட்டதுக்கு வன்மையாக கண்டணம் தெரிவித்த ஜனநாயக போராளிகள் கட்சி தலைவர் வேந்தன்.....!
கடந்த 8 ம் திகதி அணையா விளக்கு தூபி விசமிகளால் அடிச்சு நொருக்கப்பட்டதை தொடர்ந்து நேற்றைய தினம் அணையா விளக்கு தூபி உடனடியாக புனரமைப்பு செய்யப்பட்டது
தமிழ் தேசிய இருப்பை கருதியும் தமிழர் கடந்து வந்த வேதனைகள் அடுக்கு முறை மற்றும் படுகொலைகள் என்பவற்றை சந்ததிகளுக்கு கடத்தும் நோக்குடன் தான் நினைவு தூபிகள் நிருபப்படுகிறது
அதன் தொடர்ச்சியாக செம் மணியில் மனித புதை குழி அடையாளம் காணப்பட்ட பகுதியில் அமைக்கப்பட்டிருந்த அணையா விளக்கு தூபி அடித்து நொருக்கப்பட்டு சேதப்படுத்தப்பட்டுள்ளது.
செம்மணி மனிதப் புதைகுழி மீதான இருள் நீங்கவும், வலிந்து காணாமலாக்கப்பட்டோர் விடயத்திற்கு சர்வதேச நீதி கோரியும் யாழ்ப்பாணத்தின் செம்மணி பகுதியில் ”அணையா விளக்கு” போராட்டம் “மக்கள் செயல்” எனப்படும் தன்னார்வ இளையோர்களினால் ஏற்பாடு செய்யப்பட்டது.
அங்கு கடந்த ஜூன் மாதம் 23, 24 மற்றும் 25 ஆம் தினங்களில் அணையாவிளக்கு ஏற்றும் சிறு தூபி அமைக்கப்பட்டு அதில் தீபம் ஏற்பட்டது அதனை தொடர்ந்து பல கவனயீர்ப்பு ஆர்ப்பாட்டங்கள் நடைபெற்றது
ஆனாலும் நேற்றைய முன் தினம் தமிழர் மீது இருக்கிற தமது வன்மத்தை கட்டவிழ்த்து விடும் நோக்கில் இவ் நினைவுத்தூபி உடைக்கப்பட்டுள்ளதை ஒவ்வொரு தமிழ் மக்களின் மீதும் இருக்கும் கொடூர எண்ணத்தை வெளிப்படுத்துகிறது
இவ்வாறான மிலேஸ்சர் தனமாக செயற்பாடுகளை கட்டுப்படுத்த வேண்டும் மற்றும் படுகொலை செய்யப்பட்டவர்களின் நினைவுத்தூபிகள் உடைக்கப்படுவதால் படுகொலை செய்யப்பட்டவர்களை மீண்டும் மீண்டும் படுகொலை செய்யப்படுகிறார்கள் போன்ற உணர்வுகள் ஒவ்வொருவரின் மனதிலும் எழுகின்றன
மற்றும் அவர்களின் நீதிக்கான குரல் மற்றும் ஆத்மாக்கள் இவ் நினைவுத்தூபிகளை சுற்றி வருவதாகவும் அவர்களுக்கான அஞ்சலிகள் மரியாதைகளை நீங்கள் கொடுக்க இல்லை என்றாலும் பரவாயில்லை இவ்வாறான கேவலமான செயற்பாடுகளில் ஈடு பட வேண்டாம் எனவும்
இவ்வாறான செயற்பாடுகளில் ஈடுபடுவர்களை அரசாங்கம் உடனடியாக கைது செய்து அவர்களுக்கான சட்ட நடவடிக்கை எடுக்க வேண்டும் என ஜனநாயக போராளிகள் கட்சி தலைவர் வேந்தன் அவர்கள் தனது ஆதங்கத்தை தெரிவித்துள்ளார்
