Breaking News

செம்பியன் பற்று பகுதியில் பலசரக்கு கடை தீ பற்றி எரிந்து பல பெறுமதியான சொத்துக்கள் சேதம்....!

 பூ.லின்ரன்

செய்தியாளர் 



செம்பியன் பற்று பகுதியில் பலசரக்கு கடை தீ பற்றி எரிந்து பல பெறுமதியான சொத்துக்கள் சேதம்....!



யாழ் வடமராட்சி கிழக்கு செம்பியன் பற்று வடக்கு பகுதியில் நேற்றைய தினம் இரவு பலசரக்கு கடையின் உட்பகுதியில் தீ பற்றி எரிந்து பல பெறுமதியான சொத்துக்கள் சேதமாகியுள்ளது 


குறித்த சம்பவம் தொடர்பாக மேலும் தெரிய வருவதாவது 


கடை உரிமையாளர் நேற்றைய தினம் கடையினை பூட்டிவிட்டு சென்ற பின் இன்றைய தினம் காலை வியாபாரம் செய்வதற்காக கடையினை திறந்த போது கடையின் உட்பகுதி முழுவதும் எரிந்து உள்ளதை அவதானித்து உள்ளார் 


அதன் பின் குறித்த சம்பவம் தொடர்பாக முறைப்பாட்டினை மருதங்கேணி பொலிசாரிடம் பதிவிட்டுள்ளார் 


இவ் சம்பவம் தொடர்பாக மேலதிக விசாரணைகளை மருதங்கேணி பொலிசார் மேற்கொண்டு வருகின்றனர்