Breaking News

சந்நிதியான் ஆச்சிரமம் கண்டி, நுவரெலியா மாவட்ட ஆலயங்களிற்கு 625,000 ரூபா உதவிகள்.

 பூ.லின்ரன்

செய்தியாளர் 


சந்நிதியான் ஆச்சிரமம் கண்டி, நுவரெலியா மாவட்ட ஆலயங்களிற்கு 625,000 ரூபா உதவிகள்.



யாழ்ப்பாணம் வடமராட்சி தொண்டமனாறு சந்நிதியான் ஆச்சிரமத்தால் 

நுவரெலியா மாவட்டம் போஹல் கீழ்பிரிவு, கெட்டபுலா பகுதியில் அமைந்துள்ள ஶ்ரீ முத்துமாரி அம்மன் ஆலயத்தின் கோரிக்கைக்கு அமைவாக, 

ஆலய கட்டுமானப் பணிக்காக ரூபா 100,000 

நிதியும், நுவரெலியா - கெட்டபுலா நடுப்பிரிவு, கெட்டபுலா பகுதியில் அமைந்துள்ள ஶ்ரீ முத்துமாரி அம்மன் ஆலயத்தின் கோரிக்கைக்கு அமைவாக, 

ஆலய கட்டுமானப் பணிக்காக 25,000 ரூபா நிதியும், 

கண்டி ரிலாகல பிரிவு, வெஸ்ட்ஹோல் தோட்டம் பகுதியில் அமைந்துள்ள ஶ்ரீ முத்துமாரி அம்மன் ஆலயத்தின் கோரிக்கைக்கு அமைவாக, 

ஆலய கட்டுமானப் பணிக்காக 100,000 ரூபா நிதியும், 

நுவரெலியா - தலப்பத்தன தோட்டம்,கெட்டபுலா, நாவலப்பிட்டிய பகுதியில் அமைந்துள்ள ஶ்ரீ முத்துமாரி அம்மன் ஆலயத்தின் கோரிக்கைக்கு அமைவாக, 

ஆலய கட்டுமானப் பணிக்காக 100,000 ரூபா நிதியும், 

கண்டி - பேட்டர்கன் பிரிவு, பகுதியில் அமைந்துள்ள ஶ்ரீ முத்துமாரி அம்மன் ஆலயத்தின் கோரிக்கைக்கு அமைவாக, ஆலய கட்டுமானப் பணிக்காக 100,000 ரூபா நிதியும், கண்டி - தும்பகஸ்தலாவ, பகுதியில் அமைந்துள்ள ஶ்ரீ முத்துமாரி அம்மன் ஆலயத்தின் கோரிக்கைக்கு அமைவாக, 

ஆலய கட்டுமானப் பணிக்காக 100,000 ரூபா நிதியும்,  

நுவரெலியா - குயின்ஸ்பெரி மேற்பிரிவு, கெட்டபுலா பகுதியில் அமைந்துள்ள ஶ்ரீ முத்துமாரி அம்மன் ஆலயத்தின் கோரிக்கைக்கு அமைவாக, ஆலய கட்டுமானப் பணிக்காக 100,000 ரூபா நிதியும் அந்தந்த நிர்வாகத்த்தினரிடம் சந்நிதியான் ஆச்சிரம முதல்வர் கலாநிதி சாதனைத்தமிழன் செ.மோகனதாஸ் சுவாமிகளால் வழங்கிவைக்கப்பட்டன. இன்றைய செவ்வாய்கிழமை இடம் பெற்ற இந்நிகழ்வுகளில் 

சந்நிதியான் ஆச்சிரம முதல்வர் சாதனைத் தமிழன் செ.மோகனதாஸ் சுவாமிகள் அவர்களுடன் தொண்டர்களும் நேரடியாகச் சென்று வழங்கி வைத்தார்.