Breaking News

தேசியமட்ட சாதனையாளர்களுக்கு மதிப்பளிப்பு!

 தேசியமட்ட சாதனையாளர்களுக்கு மதிப்பளிப்பு!



அண்மையில் கொழும்பில் நடைபெற்ற தேசியமட்ட கைப்பந்துப் போட்டியில் இரண்டாம் இடத்தைப் பெற்றுக்கொண்ட, கிளி/அக்கராயன் மகாவித்தியாலய 19 வயது ஆண்கள் அணியினருக்கு, நாடாளுமன்ற உறுப்பினரும் இலங்கைத் தமிழ் அரசுக் கட்சியின் நாடாளுமன்றக் குழுத்தலைவருமான சிவஞானம் சிறீதரன் அவர்கள் நேரில்சென்று வாழ்த்துத் தெரிவித்ததுடன், பாடசாலை நிருவாகத்தினரிடமும், மாணவர்களிடமும் பாடசாலையின் முதன்மைத் தேவைப்பாடுகள் உள்ளிட்ட விடயங்கள் தொடர்பிலும் கேட்டறிந்துகொண்டார்.


இதன்போது, பாடசாலையின் பதில் அதிபர் இராமநாதபிள்ளை ஜெயராஜ், ஆசிரியர்கள் மற்றும் கரைச்சி பிரதேச சபையின் கெளரவ உறுப்பினர்களான தட்சணாமூர்த்தி முரளி, பாரதிதாசன் எழில்வேந்தன் ஆகியோரும் கலந்துகொண்டிருந்த

னர்.