போலீசாரின் 159 வருட நிறைவுவையொட்டி பொலீஸாருக்கான பாதுகாப்பான குடிநீர்
போலீசாரின் 159 வருட நிறைவுவையொட்டி பொலீஸாருக்கான பாதுகாப்பான குடிநீர்..!
இலங்கை போலீசாரின் 159. வது ஆண்டு நிறைவையொட்டி பொலோஸாருக்கான பாதுகாப்பான வடிகட்டிய குடிநீர் வழங்கும் திட்டம் இன்று பருத்தித்துறை போலீஸ் நிலையத்தில் பருத்தித்துறை போலீஸ் நிலைய பொறுப்பதிகாரி தலமை போலீஸ் பரிசோதகர் பிரியந்த அமரசிங்க தலமையில் இன்று காலை 8:45 மணியளவில் சுப வேளையில் ஆரம்பித்துவைக்கப்பட்டுள்ளது.
இலங்கை போலீஸ் சேவையின் 159 வது ஆண்டு நிறைவை முன்னிட்டு காங்கேசன்துறை பிரதி பொலீஸ்மா அதிபர் 2 பிரிவிற்குட்பட்ட வல்வெட்டித்துறை, நெல்லியடி, பருத்தித்துறை, மருதங்கேணி ஆகிய பிரிவுகளுக்கு பாதுகாப்பான வடிகட்டப்பட்ட குடிநீர் சுத்திகரிப்பு நிலையத்திற்கு காங்கேசன்துறை இரண்டு பிரதி பொலீஸ்மா அதிபர் G.w.s சந்தண பிரதம விருந்தினராக கலந்துகொண்டு குடிநீர் சுத்திகரிப்பு நிலையத்திற்கு அடிக்கல் நாட்டிவைத்தார். அதனை தொடர்ந்து பருத்தித்துறை போலீஸ் நிலைய பொறுப்பதிகாரி தலமை போலீஸ் பரிசோதகர் பிரியந்த அமரசிங்க, வல்வெட்டித்துறை போலீஸ் நிலைய பொறுப்பதிகாரி கிரிசாந்த பிரிஸ், நெல்லியடி போலீஸ் நிலைய பொறுப்பதிகாரி ஜே.கேமந்தரொகான் உட்பட போலீஸ் அதிகாரிகள் பலரும் அடிக்கல்லை நாட்டிவைத்தனர்.
இதில் வல்வெட்டித்துறை, நெல்லியடி, பருத்தித்துறை, மருதங்கேணி போலீஸ் நிலையங்களின் போலீஸ் அதிகாரிகள் பலரும் கலந்துகொண்டு சிறப்பித்தனர்.